மீரட்:குண்டுவெடிப்பை நிகழ்த்த பணம் வாக்குறுதியளித்து ஈரானிலிருந்து தொலைபேசி அழைப்பு வந்ததாக மீரட்டை சார்ந்த இறைச்சி வியாபாரி ஒருவர் அளித்த புகாரை தொடர்ந்து மேலும் 2 பேர் அதே மாதிரியான புகாரை அளித்துள்ளனர்.
இதற்குமுன்பு அளித்த புகாரை சிறப்பு புலனாய்வுக்குழுவும், போலீசாரும் விசாரணை நடத்திவரவே ஆதில், விகாஸ் ஆகிய இருவர் போலீஸாரிடம் குண்டுவெடிப்பை நிகழ்த்த பணம் வாக்குறுதியளித்து வெளிநாட்டிலிருந்து தொலைபேசி அழைப்பு வந்ததாக புகார் அளித்துள்ளனர். ஜூலை 17-ஆம் தேதி நகரத்தின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பகுதியில் குண்டுவெடிப்பை நிகழ்த்த ஒன்றரை கோடி ரூபாய் வாக்குறுதியளித்து தொலைபேசி அழைப்பு வந்ததாக தெரிவிக்கிறார் ஆதில்.
விகாஸிற்கு ஒருகோடி ரூபாய் வாக்குறுதியளித்து தொலைபேசி வந்ததாக கூறியுள்ளார்.மும்பை குண்டுவெடிப்பு நிகழ்ந்த பிறகு மீரட்டைச்சார்ந்த இறச்சி வியாபாரி ஹாஷிம் இலாஹி தனக்கு வெளிநாட்டிலிருந்து குண்டுவெடிப்பை நிகழ்த்த பணம் வாக்குறுதியளித்து தொலைபேசி அழைப்பு வந்ததாக புகார் அளித்திருந்தார். இந்த தொலைபேசி அழைப்பு ஈரான், தாஜிகிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து வந்துள்ளது கண்டறியப்பட்டது.
0 கருத்துரைகள்:
Post a Comment