புதுடெல்லி:இந்தியாவில் பயங்கரவாத தாக்குதல்களுக்கு அம்மோனியம் நைட்ரேட்டை அதிகமாக உபயோகிப்பதை தொடர்ந்து அம்மோனியம் நைட்ரேட்டின் உபயோகத்திற்கு கட்டுப்பாட்டை ஏற்படுத்த அரசு சட்டம் கொண்டுவர உள்ளது. இதற்காக வெடிப்பொருள்களை கையாளும் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்படும். சட்டத்திருத்த மசோதா பாராளுமன்ற மழைக்கால கூட்டுத்தொடரில் தாக்கல் செய்யப்படும் என உள்துறை அமைச்சகத்தின் உயர்வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மும்பை தொடர் குண்டுவெடிப்பில் அம்மோனியம் நைட்ரேட்டை உபயோகித்தது கண்டறிந்ததை தொடர்ந்து அதற்கு கட்டுப்பாட்டை ஏற்படுத்த மத்திய அரசு தீர்மானித்தது. அம்மோனியம் நைட்ரேட் கிடைப்பதை கடினமாக்குவதன் மூலம் அதனை உபயோகித்து குண்டுவெடிப்புகளை நிகழ்த்துபவர்களை கண்டறிய இயலும். தற்போது அம்மோனியம் நைட்ரேட்டை கைவசம் வைத்திருப்பது வெடிப்பொருள் சட்டத்தின்படி குற்றமல்ல. அம்மோனியம் நைட்ரேட் வேதியியல் பொருளாக பயன்படுத்தப்பட்டுவருகிறது என்பதுதான் இதற்கு காரணம்.
அம்மோனியம் நைட்ரேட் கிடைப்பதற்கு கட்டுப்பாட்டை ஏற்படுத்துவதன் மூலம் விவசாயத்துறைக்கு பாதிப்பு ஏற்படும். இச்சூழலில் மாநில அரசுகளுடன் தொடர்புகொண்டு அவர்களுடைய கருத்துக்களை கேட்ட பிறகு மசோதா தயாரிக்கப்படும்.அம்மோனியம் நைட்ரேட் தயாரித்தல், சேகரித்தல், கொண்டு செல்லுதல், விற்பனை ஆகியவற்றில் தெளிவான வழிகாட்டுதலுடன் கட்டுப்பாட்டு ஏற்படுத்தப்படும். வெடிப்பொருள் சட்டத்தின் வரம்பிற்குள் இதனை கொண்டு வருவதன் மூலம் சட்டத்திற்கு புறம்பாக இதனை வாங்குவதும், கைவசம் வைத்திருப்பதும் கடுமையான தண்டனையை அளிக்கும் குற்றமாக கருதப்படும்.
2008 ஆம் ஆண்டு டெல்லி குண்டுவெடிப்பிற்கு பிறகு அம்மோனியம் நைட்ரேட்டை கட்டுப்படுத்த மத்திய உள்துறை அமைச்சகம் சட்டத்திருத்தத்திற்கு சிபாரிசு செய்தபோதிலும் விவசாயத்துறையை பாதிக்கும் என்பதால் அதனை நடைமுறைப்படுத்தவில்லை. ஆனால், அதன் உபயோகத்தின் மீது கண்காணிக்கவும், தவறான நபர்களிடம் அம்மோனியம் நைட்ரே செல்வதை தடுக்கவும் நடவடிக்கையை மேற்கொள்ள மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கோரிக்கை விடுத்திருந்தது.

0 கருத்துரைகள்:
Post a Comment