Wednesday, July 20, 2011

லிபியா:கத்தாஃபி பிரதிநிதிகள்-அமெரிக்கா நேருக்கு நேர் பேச்சுவார்த்தை

ObamaGaddafiHug
வாஷிங்டன்/திரிபோலி:லிபியாவின் முஅம்மர் கத்தாஃபியின் பிரதிநிதிகளும், அமெரிக்காவின் மூத்த அதிகாரிகளும் முதன்முறையாக நேருக்கு நேர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். பேச்சுவார்த்தை தொடர்பான செய்தியை உறுதிச் செய்த அமெரிக்க வெளியுறவுத்துறை கத்தாஃபி பதவி விலகவேண்டும் என கோரிக்கை விடுத்ததாக தெரிவித்துள்ளது.

துனீசியாவில் நடந்த இப்பேச்சுவார்த்தையில் எவ்வித நிபந்தனைகளும் விதிக்கப்படவில்லை. அமெரிக்க உறவில் புதிய காலடிச்சுவடாக இப்பேச்சு வார்த்தை அமைந்துள்ளது. லிபியாவின் மக்கள்தாம் அவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கவேண்டுமே தவிர வெளிநாட்டு சக்திகள் அல்ல என்பதை பேச்சுவார்த்தையின் போது தெளிவுப்படுத்தியதாக லிபியா அரசின் செய்தி தொடர்பாளர் மூஸா இப்ராஹீம் தெரிவித்தார்.

கிழக்கு பிராந்திய விவகாரங்களுக்கான வெளியுறவுத்துறை துணைச்செயலாளர் ஜெஃப்ரி ஃபெல்ட்மான், லிபியாவின் அமெரிக்க தூதர் ஜினிக்ரிட்ஸ் ஆகியோர் அமெரிக்க பிரதிநிதிகளாக் இப்பேச்சுவார்த்தையில் கலந்துக்கொண்டனர். ஆனால் லிபியாவின் பிரதிநிதிகள் யார்? என்பதுக்குறித்து தெரிவிக்கப்படவில்லை. கடந்தவாரம் துனீசியாவில் வைத்து லிபியாவின் அரசு பிரதிநிதிகளும், பிரான்சும் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தது. இந்நிலையில் எண்ணெய் நகரமான ப்ரிகாவை எதிர்ப்பாளர்கள் லிபியா ராணுவத்திடமிருந்து கைப்பற்றியதாக பிரான்சு அறிவித்துள்ளது.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza