Wednesday, July 6, 2011

லிபியா-ரஷ்யா பேச்சு வார்த்தை தோல்வி

download
மாஸ்கோ:லிபியாவின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்காக ரஷ்யாவின் ஸோச்சியில் நடந்த பேச்சுவார்த்தையில் தீர்வு ஏற்படவில்லை. இரண்டு தினங்களாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இருபிரிவினரும் தங்களது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்ததுடன், ஒருவரையொருவர் விமர்சனமும் செய்தனர்.

லிபியாவில் எவ்வாறு அமைதியை கொண்டுவரலாம் என்பது குறித்து கருத்தொற்றுமை ஏற்படுத்த இதுவரை இயலவில்லை என ரஷ்யாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஸெர்ஜி லாவ்ரோவ் பேச்சுவார்த்தைக்கு பிறகு தெரிவித்துள்ளார்.

பேச்சுவார்த்தையின் இறுதியில் தென்னாப்பிரிக்க அதிபர் ஜேக்கப் சுமோவும் பங்கேற்றார். ஐ.நா நடவடிக்கையின் ஒரு பகுதியாக லிபியாவில் விமானத் தாக்குதலை நடத்துவதாக கூற நேட்டோ முயற்சிக்கிறது என சுமோ குற்றம் சாட்டினார். லிபியாவில் விமானத்தாக்குதல் நடத்துவது தொடர்பாக ஐ.நாவில் நடந்த வாக்கெடுப்பில் கலந்துக்கொள்ளாத ரஷ்யா கடந்த வாரம் லிபியாவில் எதிர்ப்பாளர்களுக்கு ஆயுதம் வழங்கிய பிரான்சின் நடவடிக்கையை கடுமையாக விமர்சித்தது.

அதே வேளையில் கத்தாஃபி பதவி விலக தயாராக இருப்பதாக பிரபல செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza