Monday, July 18, 2011

தொலைபேசி ஒட்டுக்கேட்பு:ரபேக்கா ப்ரூக்ஸ் கைது

rebekah-brooks-murdoch.gi.top
லண்டன்:தொலைபேசி ஒட்டுகேட்பு விவாதத்தை தொடர்ந்து இழுத்து மூடிய நியூஸ் ஆஃப் த வேர்ல்ட் பத்திரிகையின் முன்னாள் எடிட்டரும் ஊடக முதலை மர்டோக்கின் வலதுகரமுமான ரபேக்கா ப்ரூக்ஸ் கைதுச்செய்யப்பட்டுள்ளார். இதனை பிரிட்டன் பத்திரிகைகள் தெரிவித்துள்ளன.

பிரபலங்களின் தொலைபேசி உரையாடல்களை ஒட்டுகேட்பு சம்பவத்தில் மர்டோக்கின் 168 ஆண்டுகால பழைமை வாய்ந்த நியூஸ் ஆஃப் த வேர்ல்ட் பத்திரிகை இழுத்து மூடப்பட்டது. கடந்த வெள்ளிக்கிழமை அப்பத்திரிகையின் முன்னாள் எடிட்டர் ரபேக்கா தனது சி.இ.ஒ பதவியை ராஜினாமா செய்திருந்தார். ரபேக்காவின் கைது செய்தியை குறித்து பதிலளிக்க அவருடைய வழக்கறிஞர் டேவ் வில்ஸன் மறுத்துவிட்டார்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza