பெங்களூர்:பிரபல வழக்கறிஞரும், மனித உரிமை ஆர்வலருமான நவ்ஷாத் காஷிம்ஜியின் கொலைவழக்கை சி.பி.ஐ விசாரிக்க கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காஷிம்ஜியின் கொலையில் உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு பங்கிருப்பதாக குற்றம் சாட்டி அவருடைய சீனியர் வழக்கறிஞர் புருஷோத்தம் பூஜாரி அளித்த மனுவை பரிசீலித்த உயர்நீதிமன்ற நீதிபதி மோகன் சாந்தகவுடர் சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட்டார்.
நிழலுக தாதா சோட்டா ஷக்கீலின் உதவியாளர் ரஷீத் மலபாரிக்காக ஆஜரானதால் அந்த பகையை தீர்க்க நடத்திய கொலையில் உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு பங்கிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கடந்த 2009 ஏப்ரல் மாதம் ரஷீத் மலபாரிக்காக ஆஜராகிவிட்டு திரும்பும் வேளையில் மங்களூர் லோன்ஸாயி ஹோட்டலுக்கு அருகே வைத்து நவ்ஷாத் காஷிம் சுட்டுக்கொல்லப்பட்டார்.

0 கருத்துரைகள்:
Post a Comment