டெஹ்ரான்:சனிக்கிழமை துப்பாக்கியால் சுடப்பட்டு கொல்லப்பட்ட ஈரானின் அணு விஞ்ஞானி ரஸாயியின் கொலையின் பின்னணியில் இஸ்ரேலும், அமெரிக்காவும் செயல்பட்டுள்ளதாக ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.
இச்சம்பவத்தை ஈரான் பாராளுமன்ற சபாநாயகர் அலி லிர்ஜானி ’அமெரிக்க-சியோனிச தீவிரவாதம்’ என குறிப்பிட்டார். இத்தகைய செய்திகளின் எதிர்விளைவுகளை குறித்து அவர்கள் சிந்திக்கவேண்டும் என அவர் கூறினார்.
கடந்த சனிக்கிழமை தனது வீட்டின் முன்னால் வைத்து பைக்கில் வந்த மர்ம நபர்களால் ரஸாயி சுட்டுக்கொல்லப்பட்டார். ஆனால், கொல்லப்பட்டது அணுவிஞ்ஞானி அல்ல எனவும், அவர் இயற்பியல் துறை பேராசிரியர் மட்டுமே என ஈரானில் சில அதிகாரிகளை மேற்கோள்காட்டி சி.என்.என் கூறுகிறது.
0 கருத்துரைகள்:
Post a Comment