மும்பை:பத்திரிகையாளர் ஜோதிர்மயி டே (ஜே டே) கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள எட்டு பேர் மீது மும்பை போலீஸ் மோக்கா-மஹாராஷ்ட்ரா கூட்டுச்சதி குற்றத்தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளது. குற்றவாளி கும்பல்கள் மீது இரண்டு தடவை குற்றப்பத்திரிகை சமர்ப்பித்தால் அவர்கள் மீது மோக்கா சட்டங்களில் கூறப்பட்டுள்ளதாக கூடுதல் போலீஸ் கமிஷனர் ஹிமாம்ஷுராய் தெரிவித்துள்ளார்.
வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ரோஹி தங்கப்பன் ஜோஸஃப் என்ற சதீஷ் காலியா(வயது 34), அபிஜித் ஷிண்டே(வயது 28), அருண் டாகே(வயது 27), சச்சின் கெய்க்வாட்(வயது 27), அனில் பாக் மோடே(வயது 35), நிலேஷ் ஷின்ட்கே(வயது 34), மகேஷ் அகவானே(வயது 25) ஆகியோரை கடந்து வாரம் போலீஸ் கைது செய்தது. இவர்களுக்கு ஜே டேவை அடையாளம் காட்டிய வினோத் அன்ஸாரி என்ற வினோத் செம்பூரை அதற்கு பிறகு போலீஸ் கைது செய்தது.
இவருடைய போலீஸ் காவலை நீதிமன்றம் இம்மாதம் 13-ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது. நிழலுக தாதா சோட்டாராஜனின் கட்டளையின்படி குற்றவாளிகள் ஜே டேவை கொலை செய்ததாக போலீஸ் கூறுகிறது. குற்றஞ்சாட்டப்பட்டோருக்கு 5 லட்சம் ரூபாய் கிடைத்ததாக போலீஸ் கூறுகிறது. ஆனால் கொலைக்கான காரணம் தெளிவாக்கப்படவில்லை.

0 கருத்துரைகள்:
Post a Comment