Saturday, July 16, 2011

இஷ்ரத் போலி என்கவுண்டர்:போலீஸ் வாக்கு மூலத்தில் முரண்பாடு-எஸ்.ஐ.டி

அஹ்மதாபாத்:2004-ஆம் ஆண்டு இஷ்ரத் ஜஹான் உள்பட நான்குபேர் போலி என்கவுண்டரில் கொல்லப்பட்ட வழக்கில் போலீசாரின் வாக்கு மூலத்தில் முரண்பாடுகளை சிறப்பு புலனாய்வு குழு(எஸ்.ஐ.டி) கண்டறிந்துள்ளது. போலி என்கவுண்டர் நேற்று முன்தினம் மீண்டும் ஒத்திகை செய்து பார்த்த பொழுது இந்த முரண்பாடு கண்டறியப்பட்டது.

சொஹ்ரபுதீன் ஷேக் போலி என்கவுண்டர் கொலை வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்ட சஸ்பெண்ட் செய்யப்பட்ட போலீஸ் அதிகாரி என்.கெ.ஆமின் அளித்த வாக்கு மூலங்கள் உண்மைக்கு பொருந்தாதது என விசாரணையின் ஒரு பகுதியாக போலீஸ் அகாடமியில் மீண்டும் இச்சம்பவத்தை ஒத்திகை செய்து பார்த்த எஸ்.ஐ.டி கண்டறிந்துள்ளது.

இஷ்ரத் ஜஹான் உள்பட நான்கு பேரின் மீது துப்பாக்கியால் சுட்டது தான் அல்ல எனவும், போலீஸ் ஜீப்பின் முன் இருக்கையில் அமர்ந்திருந்த கமாண்டோ துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார் என போலி என்கவுண்டர் நடைபெறும் வேளையில் சம்பவ இடத்தில் இருந்த எஸ்.பி ஆமின் அளித்த வாக்கு மூலமாகும்.

ஆனால், முன்னிருக்கையில் இருந்து கொண்டு ஆமின் கூறிய திசையை நோக்கி துப்பாக்கியால் சுட இயலாது என மோக் டிரில்(செயற்கை ஒத்திகை) நடத்திய அதிகாரிகள் கண்டறிந்தனர். டம்மியான கார் மீது போலீஸ் ஜீப்பின் முன் இருக்கையிலிருந்து துப்பாக்கியால் சுட்ட பொழுது ஏற்பட்ட டம்மி காரில் ஏற்பட்ட சேதமும், போலி என்கவுண்டரின் போது காரில் ஏற்பட்ட சேதத்தையும் ஒப்பிட்டு பார்த்த பொழுது போலீசாரின் வாக்குமூலத்தில் முரண்பாடு தெரியவந்தது.

எஸ்.பி ஆமீன்  தான் இஷ்ரத் ஜஹான் உள்ளிட்ட நான்கு பேர் மீது துப்பாக்கியால் சுட்டுள்ளார் என எஸ்.ஐ.டி கருதுகிறது. முன்பு இவ்வழக்கை விசாரித்த க்ரைம்ப்ராஞ் டி.எஸ்.பி தருண் போரோட்டும் கமாண்டோக்களும் இஷ்ரத் பயணித்த கார் மீது துப்பாக்கியால் சுட்டனர் என கண்டறிந்தது. புதிய கண்டுபிடிப்பின் அடிப்படையில் ஆமினிடம் எஸ்.ஐ.டி விசாரணை நடத்தும்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza