காபூல்:ஆப்கானிஸ்தானில் நூரிஸ்தான் மாகாணத்தில் தாலிபான் போராளிகளும் பாதுகாப்பு படையினரும் மோதிக் கொண்டதில் 78 பேர் கொல்லப்பட்டனர். இரண்டு தினங்களாக தொடர்ந்த போராட்டத்தில் 33 போலீஸாரும், 40 போராளிகளும் கொல்லப்பட்டதாக மாகாண ஆளுநர் ஜமாலுத்தீன் பாதர் தெரிவித்துள்ளார். இச்சம்பவத்தில் ஐந்து சிவிலியன்களும் கொல்லப்பட்டனர்.
பாக்.-ஆப்கானிஸ்தான் எல்லையில் ராணுவ மையத்தின் மீது ஆயுதம் ஏந்திய போராளிகள் தாக்குதலை தொடுத்தனர். எல்லை கடந்த தாக்குதலில் அப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் பீதி வயப்பட்டுள்ளனர். போராளிகளை துரத்த இயலாமைக்கு இரு நாடுகளும் பரஸ்பரம் குற்றம் சாட்டுகின்றன.

0 கருத்துரைகள்:
Post a Comment