Saturday, July 16, 2011

பென்டகன் மீது சைபர் தாக்குதல்:24 ஆயிரம் கோப்புகள் மாயம்

வாஷிங்டன்:அமெரிக்காவின் பாதுகாப்புத்துறை தலைமையகமான பென்டகனின் மீது கடுமையான சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இவ்வருட துவக்கத்தில் இத்தாக்குதலின் காரணமாக பாதுகாப்புத்துறை தொடர்புடைய தொழில்நுட்ப கோப்புகள் களவாடப்பட்டுள்ளதாக உயர்மட்ட வட்டாரங்கள் உறுதி செய்துள்ளன. கால் லட்சம் கோப்புகள் களவாடப்பட்டுள்ளதாக பெண்டகனின் பாதுகாப்பு துணை செயலாளர் வில்லியம் லைன் தெரிவித்துள்ளார்.

இவ்வளவு மதிப்புமிக்க கோப்புகள் களவாடப்பட்டதை தொடர்ந்து பெண்டகனின் சைபர் துறை பாதுகாப்பை குறித்து கேள்விகள் எழுந்துள்ளன. ஆனால், தாக்குதலின் பின்னணியில் ஏதேனும் நாடுகள் அல்லது நிறுவனங்களின் பங்கினை குறித்து வில்லியம் லைன் தெரிவிக்கவில்லை.

கடந்த மார்ச் மாதம் இந்த திருட்டு நடந்துள்ளதாக கருதப்படுகிறது. பாதுகாப்புத்துறைக்காக செயல்படும் சில ஒப்பந்தக்காரர்களின் வழியாக சைபர் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. 15 ஆயிரம் நெட்வர்க்குகளும், 70 லட்சம் கம்ப்யூட்டர்களும் அமெரிக்க பாதுகாப்புத்துறையுடன் இணைக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு ரகசிய புலனாய்வு அமைப்பு தான் இச்சம்பவத்தின் பின்னணியில் செயல்பட்டுள்ளதாக கருதுவதாக பெயர் வெளியிட விரும்பாத அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார். ஆனால் அவர் அந்த நாட்டின் பெயரை கூற மறுத்துவிட்டார்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza