Thursday, June 2, 2011

காஸா ரபாஹ் எல்லை மீது மீண்டும் புதிய கட்டுப்பாடுகள் !

OurUmmah: எகிப்து, காஸா ரபாஹ் எல்லை கடந்த மாதம் சனிக்கிழமை -28.05.2011- தொடக்கம் நிரந்தரமாக திறந்துள்ளதாகவும் பலஸ்தீனர்கள் தடைகள் அற்ற போக்குவரத்து செய்ய முடியும் என்று அறிவிக்கப்பட்ட போதும் நேற்று புதன் கிழமை முதல் தினம் ஒன்றுக்கு 350 பேர் மட்டும் எல்லையை கடந்து செல்ல அனுமதிக்கபடுவர் என்று எகிப்து இராணுவ இடைக்கால நிர்வாகம் அறிவித்துள்ளதாக ஹமாஸ்  தெரிவித்துள்ளது.

தினமும் 8 மணித்தியாலங்கள் இந்த எல்லை திருந்து இருக்கும் தடைகள் அற்ற போக்குவரத்து செய்ய முடியும் என்ற மகிழ்ச்சியில் பலஸ்தீனர்கள் இருந்தபோதும் கடந்த இரண்டு நாட்களாக மீட்டும் கட்டுப்பட்டுகள் விதிக்கபட்டுள்ளதால் இன்று பலதீனகர்கள் மகிழ்ச்சி அடித்து செல்லபட்டுள்ளது என்று ஹமாஸ் மேலும் தெரிவித்துள்ளது.
  
 எகிப்து நிர்வாகம் நேற்று புதிய நுழைவு ஒழுங்கு ஒன்றையும் அறிவித்துள்ளது இதன் படி வாரம் ஒன்றுக்கு ஆறு நாட்கள் எல்லை திறக்கப்படும் என்றும் தினமும் தற்போது இருப்பதைவிட இரண்டு மணித்தியாலங்கள் மேலதிகமாக திறந்திருக்கும் என்று அறிவித்துள்ளது எனினும் தினம் ஒன்றுக்கு அனுமதிக்கப்படும் காஸா மக்களின் எண்ணிக்கையை 350 என்று மட்டு படுதியுள்ளதுடன் எல்லையின் ஊடாக உள்நுழைய முடியாதவர்கள் பட்டியல் ஒன்றையும் தயாரித்துள்ளது.

அதை ஏற்றுகொள்ள முடியாது அந்த பட்டியல் அகற்றப்படவேண்டும் என்று ஹமாஸ் தெரிவித்துள்ளது இதற்கு பதிலளித்த எகிப்து இராணுவ நிர்வாகம் ஹமாஸின் இந்த கோரிக்கையை தாம் ஆராய நேரம் மேலும் தேவை என்று தெரிவத்துள்ளது அமெரிக்க மற்றும் இஸ்ரேலின் அழுத்தம் எகிப்து மீது பிரயோகிக்கப் படுவதை இந்த ரபாஹ் எல்லை கட்டுபாடுகள் காட்டுவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza