வாஷிங்டன் : அமெரிக்க பாதுகாப்பு செயலர் ராபர்ட் கேட்ஸ் சரியான யுத்த உக்திகள் மற்றும் வளங்கள் இல்லாத காரணத்தால் எதிர்பார்த்ததை விட அமெரிக்கா போரில் அதிக காலம் ஈடுபட்ட காரணத்தால் அமெரிக்க மக்கள் போரை குறித்து களைப்படந்திருப்பதாக கூறினார்.
இம்மாத இறுதியில் ஓய்வு பெற போகும் கேட்ஸ் “ அமெரிக்க மக்களின் இவ்வுணர்வு தமக்கு நன்கு தெரியும் என்றும் ஆனால் சில தவறான முடிவுகளால் 2008 வரை ஆப்கனில் அமெரிக்கவின் படையிருப்பு குறைவாகவே இருந்தது” என்றார்.
மேலும் ஆப்கனில் நடைபெற்ற போரில் 2001-2002 ஆம் ஆண்டுகளில் அமெரிக்கா ஆப்கனை வென்றதாகவும் பின் ஈராக் விவகாரத்தால் அப்படைகள் ஈராக்குக்கு அனுப்பியதுடன் ஆப்கனை கண்டு கொள்ளாமல் இருந்தது தான் அமெரிக்கா செய்த தவறு என்று சொன்ன கேட்ஸ் தான் பதவியேற்றதில் இருந்து இது வரை ஆப்கனில் 194 அமெரிக்கர்கள் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும் ஈராக் மற்றும் ஆப்கன் போர்களின் இலக்கு அமெரிக்காவின் பாதுகாப்பை உறுதி செய்தல், அமெரிக்காவின் மதிப்பை உயர்த்தி பிடித்தல் மற்றும் அமெரிக்க நலன்களை பாதுகாத்தலே என்றும் கேட்ஸ் கூறினார். இவற்றை அடைந்தாலே நாம் நினைத்ததை சாதிக்க முடியும் என்றும் கேட்ஸ் கூறினார்.
0 கருத்துரைகள்:
Post a Comment