ஸ்பெக்ட்ரம் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ஊழல் செய்தாக தயாநிதி மாறனுக்கு எதிராக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இவர் 2004 முதல் 2007ஆம் ஆண்டுவரை தொலைத் தொடர்பு அமைச்சராகவும், தற்போது மத்திய ஜவுளித்துறை அமைச்சராகவும் உள்ளார்.
இந்நிலையில் முதலமைச்சர் ஜெயலலிதா கோட்டையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவரிடம், மத்திய மந்திரி தயாநிதி மாறன் மீது புகார் எழுந்துள்ளதே? என்று கேட்கப்பட்டது.
அதற்கு அவர், ‘’பிரதமர் இதில் தேவையான நடவடிக்கை எடுப்பார் என்று நம்புகிறேன்.
மந்திரி பதவியில் இருந்து தயாநிதிமாறனை நீக்க வேண்டும், இதை மத்திய அரசு செய்யும் என்று நம்புகிறேன்.
அல்லது தயாநிதி மாறன் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு சட்டத்தை எதிர் கொள்ள வேண்டும்’’ என்று பதிலளித்தார்.
0 கருத்துரைகள்:
Post a Comment