Monday, June 20, 2011

இந்தியாவில் விரைவில் “புல்லட்” ரெயில் அறிமுகம்!!!

புதுடெல்லி:பிரான்ஸ் நாட்டில் உள்ளது போன்று புல்லட் ரெயில் எனப்படும் அதிவிரைவு ரெயில் சேவையை தொடங்க இந்திய ரெயில்வே துறை திட்டமிட்டுள்ளது.

இந்த ரெயில் மணிக்கு 300 கிலோமீட்டர் வேகத்தில் ஓடும்.  பிரான்ஸ் நாட்டில் புல்லட் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அங்கு மணிக்கு 280 to 300 கிலோ மீட்டர் வேகத்தில் புல்லட் ரெயில்கள் இயக்கப்படுகின்றன.

இந்தியாவிலும் புல்லட் ரெயில் சேவையை தொடங்க ரெயில்வே துறை திட்டமிட்டுள்ளது.  புல்லட் ரெயில்களை இயக்க சில வழித்தடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அந்த வழித்தடங்களில் புல்லட் ரெயில் இயக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து ஆலோசனை வழங்க உலகளாவிய காண்டிராக்ட் விடப்பட இருக்கின்றன.

600 கிலோ மீட்டர் தூரத்தை 2 மணி நேரத்தில் சென்று அடையும் வகையில் புல்லட் ரெயிலின் வேகம் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. புல்லட் ரெயில் திட்டத்தின் மூலம் சுற்றுச்சூழல் பாதிப்பை குறைக்க முடியும். புதிய நகரங்களை உருவாக்க வாய்ப்பு ஏற்படும். இதனால் கிராமப்புறங்களில் இருந்து நகரங்களுக்கு மக்கள் இடம்பெயர்வது பெருமளவில் குறையும் என்றும் நம்பப்படுகிறது.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza