பாபா ராம்தேவ் மீதான தாக்குதலை அதிகப்படுத்தியுள்ள காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் திக் விஜய் சிங், யோகா குரு பாபா ராம்தேவ் ஊழலுக்கு எதிராக உண்ணாவிரதம் இருப்பது 5 நட்சத்திர சத்தியாகிரகம் போல் உள்ளது என்று விமர்சனம் செய்துள்ளார். டெல்லியில் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த நேர்காணலின்போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
காவித் தீவிரவாதத்தில் இருந்து மக்களின் கவனத்தை திருப்ப, ஆர்எஸ்எஸ் மற்றும் விஎச்பி ஆதரவுடன் பாபா ராம்தேவ் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார் என்பது தற்போது தெளிவாகியுள்ளது என்று திக் விஜய் சிங் கூறினார்.
இத்தகைய போராட்டத்தை ஊக்கப்படுத்துவதன் மூலம் ஆர்எஸ்எஸ், விஎச்பி அமைப்புகள், அரசியலமைப்பு மற்றும் நாடாளுமன்ற ஜனநாயகத்தை இல்லாமலாக்க முயல்வதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
ஐந்து நட்சத்திர வசதிகளுடன் அவருக்கு உண்ணாவிரத அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. ஜெட் விமானத்தில் பறக்கும் பாபா ராம்தேவ் மேற்கொண்டுள்ள உண்ணாவிரதம் எந்தவகையான சத்தியாகிரகம் என்று எனக்கு தெரியவில்லை என்று கூறியது திக் விஜய்சிங், காவித் தீவிரவாதத்திலிருந்து மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காக ஆர்.எஸ்.எஸ். மற்றும் வி.எச்.பி.யால் திட்டமிடப்பட்டதே இந்த உண்ணாவிரதம் என்றும் திக்விஜய் சிங் கூறினார்.
0 கருத்துரைகள்:
Post a Comment