Saturday, May 21, 2011

பெட்ரோல் விலை உயர்வு மற்றும் எண்டோசல்பான் தடை செய்ய கோரி SDPI ஆர்ப்பாட்டம்

பெட்ரோல் விலை உயர்வு மற்றும் எண்டோசல்பான் தடை செய்ய கோரி சென்னையில் நேற்று ( 20 -05 -2011 ) 4 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு SDPI மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தியது.

பெட்ரோலிய பொருட்கள்  விலை உயர்வு தொடர்கதையாகி வருகிறது. இதனால் அத்தியாவசிய பொருள்களின் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது. இந்நிலையில் மத்திய அரசு பெட்ரோல் விலையை ரூ.5 உயர்த்தியுள்ளது. பிற பெட்ரோலிய பொருட்களின் விலையை உயர்த்த பரிசீலித்து வருகிறது.
மத்திய அரசின் இந்த பொறுப்பற்ற செயலை கண்டித்தும், உலகின் பெரும்பாலான நாடுகள் தடை செய்த  எண்டோசல்பான் பூச்சி கொல்லி மருந்தை தடை செய்யும் விசயத்தில் மத்திய அரசு சுணக்கம் காட்டுவதை கண்டித்தும், உடனே எண்டோசல்பானை தடை செய்ய வலியுறித்தியும் நேற்று ( 20 -05 -2011 ) 4 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு SDPI சார்பாக மாநில செயலாளர் அபூபக்கர் சித்திக் தலைமையில் மாபெரும் ஆர்பாட்டம் நடைபெற்றது.



இதில் SDPI-ன் வட சென்னை மாவட்ட செயலாளர் S.அமீர் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். மாநில பேச்சாளர் K.செய்யத் அவர்கள் கண்டன உரை நிகழ்த்தினார். SDPI-ன்  வட சென்னை மற்றும் தென் சென்னை மாவட்ட பொறுப்பாளர்கள் முன்னிலை வகித்தனர். இறுதியாக தென் சென்னை மாவட்ட தலைவர் உசேன் நன்றி தெரிவித்தார்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza