Sunday, May 29, 2011

சட்டசபை உறுப்பினராக நாளை கருணாநிதி பதவி ஏற்பு!

தமிழக சட்டப்பேரவை உறுப்பினராக முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதி, நாளை திங்கட்கிழமை பதவி ஏற்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

தமிழக சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் கடந்த 23ஆம் திகதி பதவி ஏற்றனர். அப்போது கருணாநிதி அவரது மள் கனிமொழியைப் பார்க்க டெல்லி சென்றிருந்ததால் அன்றைய தினம் பதவி ஏற்கவில்லை. அவருடன் முன்னாள் அமைச்சர் துரைமுருகனும், சிவபதி, மனோகரன் ஆகியோரும் பதவி ஏற்காமல் இருந்தனர்.
இதில்  சிவபதி மற்றும் மனோகரன் ஆகிய இருவரும், சென்ற  வெள்ளிக்கிழமை தாற்காலிக பேரவைத் தலைவர் செ.கு. தமிழரசன் முன்னிலையில் சட்டப்பேரவை உறுப்பினராக பதவி ஏற்றனர்.

கருணாநிதி மற்றும் துரைமுருகன் ஆகிய இருவரும், நாளை திங்கட்கிழமை, சட்டப் பேரவைத் தலைவர் ஜெயக்குமார் முன்னிலையில் பதவி ஏற்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
 

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza