Monday, May 30, 2011

போர் குற்றவாளி ராஜபக்சேக்கு அமெரிக்கா நிபந்தனை!!

அமெரிக்கா முன்வைத்துள்ள நிபந்தனைகள் மற்றும் திட்டங்களை பின்பற்றுவது தொடர்பில் அரசாங்கம் இதுவரையில் தீர்மானம் எதனையூம் மேற்கொள்ளவில்லை.

அமெரிக்காவின் உதவி ராஜாங்க செயலாளர் ரொபாட் ஓ பிளக், இலங்கை பின்பற்ற வேண்டிய சில நிபந்தனைகளை தெரிவித்திருந்தார்.

இது தொடர்பில் அமெரிக்காவின் இலங்கை தூதுவர் பெட்ரிகா புட்டினிஸ் ஊடாக, வெளிநாட்டு அமைச்சர் ஜீ.எல்.பீரிஸிடம் வலியூறுத்தப்பட்டது.

அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவு தொடர இந்த நிபந்தனைகளை கடைப்பிடிக்க வேண்டியது அவசியம் என ரொபர்ட் ஓ பிலக் வலியுறுத்தினார்.

மனித உரிமைகளுக்கு மதிப்பளித்தல், இலங்கை அரசாங்கத்தின் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பில் பொறுப்புக்கூறல் உள்ளிட்ட பல்வேறு விசயங்களை இது உள்ளடக்கி இருந்தது.

அத்துடன் இலங்கையில் காணப்படுகின்ற இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு ஒன்றை முன் வைத்தல், நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்படுகின்றவற்றை நடைமுறைப்படுத்தல் என்பனவும் ஆகும்.

இது தொடர்பில் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸஷும் அரசாங்கத்துக்கு தெரியப்படுத்தியுள்ளார்.
எனினும் அரசாங்கம் அவற்றை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் இதுவரையில் எந்த தீர்மானத்தையும் மேற்கொள்ளவில்லை என அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza