Thursday, May 26, 2011

இந்தியா ஒளிரவேண்டும் என்றால் இவரைபோல் மாறுங்கள்!!

 பரிதாபாத்: அரியானா மாநிலம் பரிதாபாத்தில் உள்ள அரசு பெண்கள் பள்ளியில், நகராட்சி உதவி ஆணையர் பிரவீன் குமார், சமீபத்தில் ஆய்வு நடத்தினார்.

பள்ளியில் இருந்த மாணவியரில் பெரும்பாலானோர், "கழிவறையை சுத்தம் செய்வதற்கு, ஒரு ஊழியர் தான் உள்ளார். இதனால், கழிப்பறைகள் மிகவும் அசுத்தமாக உள்ளன.

அவற்றை பயன்படுத்த முடியவில்லை'என, புகார் கூறினர். இதைத் தொடர்ந்து, பள்ளியின் கழிப்பறைக்குள் புகுந்த உதவி ஆணையர், தானே சுத்தம் செய்தார்.

இதைப் பார்த்து, பள்ளியில் இருந்த ஆசிரியர்களும், மற்றவர்களும், அதிர்ச்சி அடைந்தனர். உதவி ஆணையர், பள்ளி கழிவறையை சுத்தம் செய்த தகவல், பரிதாபாத்தில் உள்ள, மற்ற அரசு பள்ளி நிர்வாகங்களுக்கும் தெரிவிக்கப்பட்டது.

அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கூட்டத்துக்கு, அன்றே ஏற்பாடு செய்யப்பட்டது. கல்வித் துறை அதிகாரிகளும் இதில் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்துக்கு பின், பரிதாபாத் மாவட்ட கல்வி அதிகாரி கூறுகையில், "உதவி ஆணையர், தானாக முன்வந்து கழிப்பறையை சுத்தம் செய்து, எங்களுக்கு முன் உதாரணத்தை ஏற்படுத்தி விட்டார்.

இதனால், கழிவறை மற்றும் சுற்றுப் புறங்களை சுகாதாரமாக வைத்துக் கொள்வதற்காக, மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த முடிவு செய்துள்ளோம். சுகாதாரம் குறித்த சிறப்பு கல்வி திட்டத்தையும் அமல் படுத்தவுள்ளோம்' என்றார்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza