ஒபாமாவின் இஸ்ரேலுக்கு எதிரான அண்மைய அறிவிக்கையால், யூதர்கள் அமெரிக்க அதிபர் ஒபாமாவிற்க்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக நார்வேவிலிருந்து வரும் ஆஃப்டன்போஸ்டன் (Aftenposten) பத்திரிக்கை செய்தி கட்டுரை வெளியிட்டுள்ளது.
உலகிலேயே அமெரிக்காவில் தான் யூதர்கள் அதிகம் வாழ்கிறார்கள். 2008 தேர்தலில் ஒபாமாவிற்கு 78 சதவீத அமெரிக்க வாழ் யூதர்களின் ஒட்டு கிடைத்துள்ளதாகவும் ஆனால் இஸ்ரேல், பாலஸ்தீனப் பிரச்சனையில் ஓபாமாவின் நிலைப்பாடு அவர்களுக்கு சாதகமாக இல்லை என்பதால், பெரும் யூத நிறுவனங்கள் ஒபாமாவிற்கு அளித்து வரும் நிதி உதவியை நிறுத்திக் கொள்ளப் போவதாக மிரட்டி வருகிறார்கள் என்று அந்த பத்திரிக்கையில் தலைப்புச் செய்தியாக வெளிவந்துள்ளது.
மேலும் அந்த கட்டுரையில் ஆஃப்கானிஸ்தான் தாலிபன்கள் போலவே யூதர்களும் அமெரிக்கா அதிபருக்கு எதிராக நடக்க ஆரம்பித்ததுள்ளனர் என்றும், இது 'யூத பயங்கரவாத' செயல் என்றும் கண்டித்துள்ளது.
இந்த கட்டுரைக்கு நோர்வேவில் உள்ள யூதர்களால் கடும் ஏதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஆகவே அந்த பத்திரிக்கை "யூதர்களால் அமெரிக்க அதிபர் ஒபாமாவிற்கு அச்சுறுத்தல்" என்ற தலைப்பை தனது வலைதளத்தில் "செல்வாக்குள்ள யூதர்களால் அமெரிக்க அதிபர் ஒபாமாவிற்கு அச்சுறுத்தல்" என்று திருத்திப் பதித்துள்ளது
0 கருத்துரைகள்:
Post a Comment