Friday, May 20, 2011

தமிழக முஸ்லீம் அரசியல் தளத்தில் தமீம் அன்சாரி!!

தமீம் அன்சாரி நாகை மாவட்டம், நாச்சி குளம் என்ற ஊரைச்சேர்ந்தவர். முஸ்லீம் சமூகத்தில் இருந்து மிக இளம் வயதிலே அரசியல் தளத்துக்கு வந்தவர். சிறந்த செயல்வீரர், இவரின் தோல்வி உண்மையிலேயே தமிழக முஸ்லிம்களை பொருத்தவரை இழப்பென்றே சொல்லலாம். தமிழக முஸ்லீம் தலைவர்களில் தமீம் அன்சாரி ஒரு துடிப்பான இளைஞர். இவர் ஜெயித்து சட்ட சபைக்கு சென்றிருந்தால், முஸ்லீம் மக்களின் குரலாக ஒலித்திருப்பார்.

எமக்கு தேவை ஆயிரம் நரிகளின் ஊளைகளல்ல. ஒரு சிங்கத்தின் கர்ஜனையே. அந்த வாய்ப்பு சொற்ப வாக்கு வித்தியாசத்தில் தமீம் அன்சாரிக்கு இல்லாமல் போனது கவலைக்குரிய விசயமாகும்.

சிங்கத்தின் வாலாய் இருப்பதைவிட கட்டெறும்பின் தலையாயிருப்பதே மேல்" என்று மமக முடிவெடுத்து தனிச்சின்னத்தில் நின்று 2 இடங்களில் வெற்றி பெற்றிருப்பது பாராட்டத்தக்க விசயமாகும்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza