Thursday, May 19, 2011

25 காசுக்கு டாட்டா பை பை!!

 டெல்லி:25 காசு நாணயம் வரும் ஜூலை மாதத்திலிருந்து செல்லாது. ஜூன் மாத இறுதிக்குள் இப்போதுள்ள 25 பைசா நாணயங்களை வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

25 காசு நாணயம் ஜூன் 30க்குப் பிறகு செல்லாது. எனவே, மக்கள் தங்களிடமுள்ள 25 காசு நாணயங்களையும், அதற்கும் கீழுள்ள மதிப்புள்ள நாணயங்களையும் ரிசர்வ் வங்கியில் மாற்றிக் கொள்ளலாம்.

அல்லது அந்த நாணயங்களை அரசுடைமை வங்கிகளின் சிறு நாணய பரிவர்த்தனையில் ஈடுபடும் கிளைகளில் மாற்றிக் கொள்ள வேண்டும். ஜூன் 29 ம் தேதி வங்கி அலுவலக நேரம் முடியும்வரை இவற்றை மாற்றிக் கொள்ள முடியும். இதை ரிசர்வ் வங்கி செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza