Wednesday, April 13, 2011

ஷாஹித் ஆஸ்மி சகோதரர் காலித் ஆஸ்மிக்கு குறியா?

மும்பை:பாரத் நேபாளியின் கூட்டாளிகள் என்று சந்தேகிக்கப்படும் மூன்று நபர்களை வெள்ளிக்கிழமையன்று காவல்துறை அமர்வு நீதிமன்ற வளாகத்தில் கைது செய்யுள்ளது. இவர்கள்  காலித் ஆஸ்மி (வக்கீல் ஷாஹித் ஆஸ்மியின் சகோதரர்) மற்றும் வக்கீல்  மொகாஸியை கொலைச் செய்ய வந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
பிடிப்பட்ட அம்மூவரையும் 15 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் உத்திரவிடப்பட்டுள்ளது.

கட்ந்த ஆண்டு பிப்ரவரி 11 அன்று  மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்ட ஷாஹித் ஆஸ்மி வழக்கு விசாரணை நடக்கும் நேரத்தில் இச்சம்பவம் நடந்துள்ளது. கைது செய்யப்பட்ட அம்மூவரில் இருவர் (பாபு மற்றும் முன்னா) அடையாளம் காணப்பட்டு மும்பை காவல்துறையால் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டுள்ளனர்.

அவர்களின் குறிக்கோள் இன்னும் தெளிவாகவில்லையென்றாலும், அவர்கள் வக்கீல் காலித் ஆஸ்மியை கொலைச் செய்ய வந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. ஷாஹித் ஆஸ்மி கொலை குற்றவாளிகளை காப்பாற்றவும் வந்திருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. ஆனால் குற்றவாளிகளை கைது செய்ததை உறுதிப்படுத்திய காவல்துறை,அதற்கான காரணத்தைக் கூற மறுத்துவிட்டது.

ஆனால் அன்று வழக்கத்திற்கு மாறாக  காலித் ஆஸ்மி(வக்கீல் ஷாகித் ஆஸ்மியின் சகோதரர்) மற்றும் வக்கீல்  மொகாஸி  நீதிமன்றம் வரவில்லை.
ஷாஹித் ஆஸ்மி கொலைக்கு கூலிப்படையான பக்வத் சிங் என்கிற  பாரத் நேபாளி மற்றும் விஜய் என்கிற பாலா செட்டி என்பவர்களே காரணம் என முதல் கட்ட விசாரனையில் தெரிந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza