Thursday, April 21, 2011

ஒபாமாவை குரங்காக சித்தரித்த இ-மெயில்

வாஷிங்டன்:அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவை மனித குரங்காக சித்தரித்து இனவெறியுடன் ஆட்சேபகரமான இ-மெயில் செய்தியை அனுப்பிய கலிஃபோர்னியா குடியரசு கட்சி தலைவர் மன்னிப்புக் கோரியுள்ளார்.

மனித குரங்கின் தலைப்பகுதியை மாற்றிவிட்டு ஒபாமாவின் தலையை வரைந்த சித்திரம் அமெரிக்காவில் பெரும் எதிர்ப்பை கிளப்பியிருந்த சூழலில் அவர் மன்னிப்புக் கோரியுள்ளார்.

 இச்சம்பவத்தில் தனது கண்டனத்தை தெரிவித்துள்ள குடியரசு கட்சியின் உள்ளூர் தலைவர் இதனைக் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டுமென கோரியுள்ளார்.

கலிஃபோர்னியா ஆரஞ்ச் கவுண்டி குடியரசு கட்சியின் கவுன்சிலில் தேர்வுச் செய்யப்பட்ட உறுப்பினரான 74 வயது மெர்லின் டாவன்ஃபோர்ட் இந்த இ-மெயிலை அனுப்பியவராவார்.

 தனது மோசமான நடவடிக்கைக்கு அமெரிக்கா மன்னிப்பு அளிக்க நேற்று முன்தினம் டாவன்ஃபோர்ட் அனுப்பிய இ-மெயிலில் கோரியிருந்தார். டாவன்ஃபோர்ட்டின் இ-மெயில் குறித்து வெள்ளை மாளிகை பதிலளிக்கவில்லை.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza