Friday, April 15, 2011

ஐ.நா அறிக்கை:ஃபலஸ்தீன் நாட்டின் உதயத்திற்கான துவக்கம் – ஸலாம் ஃபய்யாத்

101122_23_fayyad_103723989_625
ராமல்லா:ஃபலஸ்தீனில் ஆட்சி புரிய தனது அரசு உடன்பாடானது என கூறும் ஐ.நாவின் அறிக்கை ஃபலஸ்தீன் நாட்டின் உதயத்திற்கான துவக்கம் என ஃபலஸ்தீன் ஆணையத்தின் பிரதமர் ஸலாம் ஃபய்யாத் தெரிவித்துள்ளார்.

சுதந்திர ஃபலஸ்தீன் நாட்டை உருவாக்குவதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக ஐ.நா பிரதிநிதிகளும், சர்வதேச நிதித்துறை நிறுவனங்களும் பிரஸ்ஸல்ஸில் நடத்திய கூட்டத்தின் வெளியிடப்பட்டுள்ள தீர்மானங்களைக் குறித்து பதிலளிக்கையில் ஃபய்யாத் இதனை தெரிவித்துள்ளார்.
ஃபலஸ்தீனில் ஆட்சிபுரிய ஃபலஸ்தீன் ஆணையத்திற்கு போதுமான தகுதியிருப்பதாக ஐ.நாவின் ஆய்வறிக்கையை கூட்டம் அங்கீகரித்துள்ளது. ஃபலஸ்தீன் நாடு என்ற உண்மையை அங்கீகரித்துள்ள பிரஸ்ஸல்ஸில் நடந்த கூட்டம் ஒரு மைல்கல் என ஃபய்யாத் தெரிவித்துள்ளார்.

செப்டம்பர் மாதத்தில் சுதந்திர ஃபலஸ்தீன் நாட்டிற்கு ஐ.நா அங்கீகாரம் வழங்கும் என எதிர்பார்ப்பதாக ஃபய்யாத் தெரிவித்துள்ளார். இதற்கிடையே ஃபலஸ்தீனிலிருந்து மீன், விவசாய பொருட்களை வரியில்லாமல் இறக்குமதிச் செய்ய ஐரோப்பிய யூனியன் அனுமதி வழங்கியுள்ளது.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza