Friday, April 15, 2011

பிரதமர் ஓட்டு போடாதது வருத்தம் அளிக்கிறது: மோடி ஆதங்கம்

காந்திநகர்: "அசாம் சட்டசபை தேர்தலில், பிரதமர் மன்மோகன் சிங் ஓட்டளிக்காதது கவலை அளிக்கிறது' என்று குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கூறினார்.

குஜராத் மாநிலம், காந்திநகரில் உள்ள பண்டிட் தீனதயாள் பெட்ரோலியம் பல்கலைக்கழக கருத்தரங்கில், நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் முதல்வர் நரேந்திர மோடி கூறியதாவது: இன்று நாம் அம்பேத்கரின் பிறந்த நாளை கொண்டாடி வருகிறோம். அசாம் சட்டசபை தேர்தலில் பிரதமர் மன்மோகன் சிங் ஓட்டளிக்காதது கவலை அளிக்கிறது. அம்பேத்கர் நமக்கு சட்டம் வழங்கினார். நமக்கு ஓட்டளிக்கும் உரிமையை அச்சட்டம் வழங்கி உள்ளது. பிரதமர் ஓட்டு போடவில்லை என்று தெரிய வந்த போது, மிகவும் வருத்தம் அளித்தது. அம்பேத்கர் பிறந்த நாளில், இந்த விஷயம் மிகவும் வருத்தம் அளிக்கிறது' என்றார். அசாம் மாநிலத்தில் இரண்டு கட்டங்களாக நடந்த தேர்தலில், கடந்த 11ம் தேதி, பிரதமரும், அவரது மனைவி குர்ஷரண் கவுரும் திஸ்புர் சட்டசபை தொகுதியில் ஓட்டளிக்கவில்லை. கடந்த 20 ஆண்டுகளாக, ராஜ்ய சபா உறுப்பினராக, அசாம் மாநிலத்தில் இருந்து பிரதமர் மன்மோகன் சிங் தேர்வு செய்யப்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்க

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza