Thursday, April 21, 2011

சிலியில் கைதான அப்துல் ரவூஃபுக்கு விமான கடத்தலுடன் தொடர்பில்லை – சி.பி.ஐ

புதுடெல்லி:சிலி நாட்டில் போலீசாரால் கைது செய்யப்பட்ட அப்துல் ரவூஃப் 1990-ஆம் ஆண்டு பா.ஜ.க ஆட்சியில் விமானம் கடத்தப்பட்ட வழக்கில் சி.பி.ஐயால் தேடப்படும் நபரல்ல என்பது தெளிவாகியுள்ளது. இச்சம்பவத்தில் நடந்த சதித்திட்டத்தில் அப்துல் ரவூஃபுக்கு பங்கில்லை என சி.பி.ஐ அறிவித்துள்ளது.

விமானக் கடத்தல் தொடர்பாக சி.பி.ஐ விசாரித்துவரும் அப்துல் ரவூஃபின் பிறந்த இடமும், சிலி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள அப்துல் ரவூஃப் குறித்த விபரங்களும் ஒத்துப்போகவில்லை என சி.பி.ஐ கூறியுள்ளது.

இரண்டு நபர்களைக் கொண்ட சி.பி.ஐ குழு சிலியில் அப்துல் ரவூஃபையும், இதர நான்கு பாகிஸ்தானிகளையும் விசாரணைச் செய்தது. சட்டவிரோதமாக சிலி நாட்டிற்குள் நுழைந்த வழக்குதான் அப்துல்ரவூஃப் மீது சுமத்தப்பட்டுள்ளது என சி.பி.ஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விமான கடத்தல் தொடர்பான வழக்கில் சி.பி.ஐ தேடிவரும் அப்துல்ரவூஃப் ஜெய்ஷே முஹம்மது போராளி இயக்க தலைவர் மெளலானா மஸூத் அஸ்ஹரின் உறவினராவார்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza