Saturday, April 23, 2011

மலேகான் வழக்கு:குற்றஞ்சாட்டப்பட்ட ஃபாரூக் இக்பால் இரண்டுவார காலமாக உண்ணாவிரதம்

மும்பை: 2006-ஆம் ஆண்டு மஹராஷ்ட்ரா மாநிலம் மலேகானில் நடந்த குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக அநியாயமாக கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ள முஸ்லிம்களில் ஒருவரான ஃபாரூக் இக்பால் மக்தூமி ஆர்தர் சாலை சிறையில் இரண்டு வாரமாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

நிரபராதியான தன்னை ஒன்று விடுதலைச் செய்யுங்கள் அல்லது விசாரணையை துவங்குங்கள் என கோரி ஃபாரூக் இக்பால் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவதாக போலீஸ் அறிவித்துள்ளது.

இவ்வழக்கில் ஒன்பதுபேர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இவ்வழக்கின் குற்றப்பத்திரிகையை சி.பி.ஐ சமர்த்திருந்த போதிலும் தற்போது இவ்வழக்கு தேசிய புலனாய்வு ஏஜன்சியிடம்(என்.ஐ.ஏ) ஒப்படைக்கப்பட்டுள்ளது.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza