இஸ்லாமாபாத்:ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவால் நடத்தப்படும் போர் அதன் சுற்றியுள்ள மற்ற பகுதிகளையும் பாதிக்கும் என்பதை அமெரிக்க அரசியல்வாதிகள் சிந்திக்க தவறிவிட்டனர் என பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி குற்றம் சாட்டினார்.பத்து வருட பர்வேஸ் முஷாரப்பின் ராணுவ ஆட்சிக்கு பிறகு ஆப்கான் போர் பாகிஸ்தானில் பதற்றத்தை ஏற்படுத்துகிறது ஜனநாயகத்தையும் பொருளாதரத்தையும் பாதிக்கிறது என்று கார்டியன் பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.இது அமெரிக்கா மெக்சிகோ எல்லையோரத்தில் நடந்த மெக்சிகன் போரைப்போன்று பாகிஸ்தான் எல்லையில் நடக்கும் ஆப்கான் போர் பாகிஸ்தானில் மிகவும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று சர்தாரி தெரிவித்தார்.
தற்போது பாகிஸ்தானில் ஜனநாயகம் மலர்வதாகவும் கடந்த பத்து ஆண்டுகளில் ஜனநாயகம் அழிக்கப்பட்டு இருந்ததாகவும் அதை மீட்டு எடுப்பதற்கு சிறிது காலம் தேவை எனவும் தெரிவித்துள்ளார்.பாகிஸ்தான் எப்பொழுதும் அமெரிக்க எண்ணங்களுக்கு ஆதரவாக செயல்பட்ட நாடு ஆனால் காங்கிரஸ் உறுபினர்களும் மீடியாவும் பாகிஸ்தான் என்று வரும்போது என்ன பேசுகிறோமென்று அவர்களுக்கே தெரியவில்லை என சர்தாரி குறிப்பிட்டார்.
பாகிஸ்தான் கடந்த 60 வருடங்களாக அமெரிக்காவின் நட்பு நாடாக இருக்கின்றது ஆனால் ஒவ்வொரு முறை ஆட்சிமாரி புதியவர்கள் வரும் பொது சர்வேதேச சூழ்நிலை குறித்து அறிய சிறிது காலம் எடுத்துக்கொள்கின்றனர்.காங்கிரஸ் உறுபினர்களும் மீடியாவும் ஆப்கான் போர் முடிவை எதிர்பார்த்து கொண்டிருகின்றனர். கடந்த 12 வருடங்களாக அமெரிக்கா ஆப்கான் போரை நடத்துகின்றது. அமெரிக்க மக்கள் உட்பட அனைவரும் இந்த போரின் முடிவை எதிர்பார்த்துள்ளனர்.
பல வருடங்களாக பாகிஸ்தான் பாதுக்காப்பு உறுதி செய்யப்படாத பகுதியாக உள்ளது. அதனால் உலக சந்தையில் இந்தியாவிற்கும் மற்றும் செங்கடல் பகுதிக்கும் செல்ல வேண்டிய எரிவாயு தேங்கி உள்ளதாகவும் ஆப்கானிஸ்தானில் அமைதி நிலவும் வரை இதற்கு தீர்வு கிடைக்காது எனவும் தெரிவித்தார்.
அதனால் பாகிஸ்தானை பொறுத்த வரையில் ஆப்கானிஸ்தான் தனது வளர்ச்சியை பாதிக்கும் விஷயமாகும் என கூறியுள்ளார்.இது வரை பாகிஸ்தான் தீவிரவாதத்திற்கு எதிரான போரில் 2001 இல் இருந்து கிட்டத்தட்ட 68 பில்லியன் டாலர் செலவிட்டுருப்பதாக அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.

0 கருத்துரைகள்:
Post a Comment