Sunday, April 10, 2011

ஆசாத் மரணம் பற்றிய அறிக்கை தருமாறு ஆந்திர அரசிடம் உச்சநீதிமன்றம் கோரிக்கை

sup.court  புதுடெல்லி:மாவோயிஸ்ட் தலைவர் ஆசாத் ராஜ்குமார் மற்றும் பத்திரிக்கை நிருபர் H.C.பாண்டே ஆகியோர் போலீசாரால் கொல்லப்பட்டது குறித்து தகவலறிக்கையை சமர்பிக்குமாறு ஆந்திர அரசிடம் உச்சநீதிமன்றம் கேட்டுள்ளது.

நீதிபதி அப்தாப் ஆலம் மற்றும் R.M.லோதா ஆகியோரைக் கொண்ட தலைமை பெஞ்ச் கூறுகையில் இந்த வழக்கை விசாரிக்கும் காவல்துறை துணை கண்காணிப்பாளரை நாங்கள் விமர்சிக்கவில்லை ஆனால் இவ்வழக்கின் மீது நம்பிக்கை  கொள்வதற்காக இவ்வறிக்கையை கேட்பதாக தெரிவித்தனர்.

இந்த வழக்கில் சந்தேகத்திற்கு இடமளிக்காமல் நூறு சதவீதம் இந்த இரண்டு நபர்களின் கொலைக்கான பின்னணி தெரியவேண்டும் என்று கூறியுள்ளனர்.
மாநில மனித உரிமை ஆணையம் இவ்விஷயத்தில் விசாரனை மேற்கொண்டால் அதையும் இவ்வழக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிவித்தனர்.

கொல்லப்பட்ட நிருபரின் மனைவி பிநேட்டா பாண்டே தன்னுடைய கணவர் மற்றும் ஆசாத் என்கவுண்டர் வழக்கை மாநில புலனாய்வுக் குழு விசாரிக்க வேண்டுமென்று அளித்திருந்த மனுவை   ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza