Wednesday, April 20, 2011

நாவரசு கொலை:ஜாண் டேவிட்டுக்கு இரட்டை ஆயுள் உறுதி – உச்சநீதிமன்றம்

சிதம்பரம்:அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டு மருத்துவ படிப்பு பயின்ற நாவரசு என்ற மாணவன் கடந்த 1996ஆம் ஆண்டு அதே பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டு படித்து வந்த ஜான் டேவிட்டால் ரேகிங் செய்யப்பட்டு, கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டார்.

தமிழகத்தையே உலுக்கிய நாவரசு கொலை வழக்கை விசாரித்த கடலூர் செசன்ஸ் நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட ஜான் டேவிட்டுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் டேவிட் தரப்பு அப்பீல் செய்தது. அதை விசாரித்த நீதிபதிகள் கொலை குற்றம் தெளிவாக நிரூபிக்கப்படவில்லை என்று கூறி, ஜான் டேவிட்டை விடுதலை செய்தனர்.

ஜா‌ன் டே‌வி‌ட்டின் இந்த ‌விடுதலையை எ‌‌தி‌ர்‌த்து த‌மிழக அரசு சா‌ர்‌பி‌ல் உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் மே‌ல்முறை‌யீடு செ‌‌ய்ய‌ப்ப‌ட்டது. இ‌ந்த மனுவை ‌விசா‌‌ரி‌த்த உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌‌‌ ‌நீ‌திப‌திக‌ள் முகு‌ந்த‌ம் ஷ‌ர்மா, அ‌னி‌ல் தபே ஆ‌கியோ‌ர் இ‌ன்று ‌தீ‌‌ர்‌ப்ப‌ளி‌த்தன‌ர்.

ஜான் டேவிட்டுக்கு கடலூர் நீதிமன்றம் விதித்த இரட்டை ஆயுள் தண்டனையை உறுதி செய்த உச்சநீதிமன்றம், இந்த தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க உத்தரவிட்டது. அத்துடன் ஜான் டேவிட்டின் ஜாமீனை ரத்து செய்து, கடலூர் சிறைச்சாலை கண்காணிப்பாளர் முன்னிலையில் உடனே ஆஜராகுமாறும் உத்தரவிட்டது.

வழக்கை சரியாக விசாரிக்காமல் ஜான் டேவிட்டின் தண்டனையை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளதாக உச்ச நீதிமன்றம் கருத்துத் தெரிவித்துள்ளது.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza