பாக்தாத்:ஈராக் தலைநகரான பாக்தாதில் நடந்த இரட்டை கார் குண்டுவெடிப்பில் ஒன்பது பேர் கொல்லப்பட்டனர். 20 பேருக்கு காயமேற்பட்டது. மரணித்தவர்களில் ஈராக் ராணுவத்தினரும் அடங்குவர்.
க்ரீன் சோனின் மத்திய பகுதியில் வரிசையாக நிறுத்தப்பட்டிருந்த கார்கள் வெடித்து சிதறியது.
பலத்த பாதுகாப்பை கொண்ட க்ரீன் சோனில் வெளிநாட்டு தூதரகங்களும், உயர் அரசு அதிகாரிகளின் வீடுகளும் உள்ளன. இவ்வருடம் முதன்முறையாக தலைநகரில் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது.
ஈராக்கில் குண்டுவெடிப்புகள் குறைந்துள்ள போதும் அடிக்கடி துப்பாக்கிச்சூடும், கொலைகளும் வழக்கமாகியுள்ளன. அடுத்தமாதம் இங்கு அரபு உச்சிமாநாடு நடக்கவிருக்கவே குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது அதிகாரிகளை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
அரபுலகில் எதிர்ப்பு போராட்டம் கிளர்ந்தெழுந்துள்ள சூழலில் ஈராக்கில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள உச்சி மாநாடு நடக்குமா என்பதுக் குறித்து சந்தேகம் நிலவுகிறது.


0 கருத்துரைகள்:
Post a Comment