Friday, April 15, 2011

சுய சிறை வைப்பிலிருந்து மீட்கப்பட்ட இரு சகோதரிகளில் ஒருவர் மரணம்!

கடந்த ஏழு மாதங்களாக தாங்கள் வசிக்கும் வீட்டை பூட்டிக்கொண்டு, தங்களுக்கு தாங்களே சிறை வைத்துக்கொண்டு, மோசமான உடல் நிலையிலிருந்த  இரு சகோதரிகளை,போலீசாரும் தனியார் தொண்டு நிறுவனத்தினரும் மீட்டு, மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதில் மிகவும் மோசமான நிலையிலிருந்த ஒரு சகோதரி இன்று (வியாழன்) மரனமடைந்தார்.

உத்திர பிரதேசம் மாநிலம் நொய்டாவை சேர்ந்த சகோதரிகள் அனுராதா மற்றும் சோனாலி.இவர்கள் இருவரும் சுமார் 40 வயது உடையவர்கள். சகோதரிகள் இருவரும் திருமணம் ஆகாத நிலையில் தனியே வசித்து வந்தனர்.மூத்த சகோதரி அனுராதா சார்ட்டர்டு அக்கவுண்டண்ட் படிப்பு படித்து தேறியவர். இவர்கள் சிறுவயதிலேயே தாயை இழந்துவிட்டனர். இராணுவத்தில் அதிகாரியாக இருந்த இவர்களது தந்தை சில வருடங்களுக்கு முன்பு இறந்தது இவர்களை பெரிதும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதிலிருந்து இருவரும் பெரும் மன உளைச்சலில் இருந்து வந்தனர்.
இவர்கள் ஆசையுடன் வளர்த்து வந்த நாய், சில மாதங்களுக்கு முன்பு இறந்துபோனது.அதன் பிறகு இவர்கள் மன உளைச்சலால் பெடிதும் பாதிக்கப்பட்டனர்.கடந்த ஏழு மாதங்களாக தாங்கள் வசிக்கும் வீட்டை பூட்டிக்கொண்டு, தங்களுக்கு தாங்களே சிறை வைத்துக்கொண்டனர். வெளியே வருவதும் கிடையாது, யாருடனும் பேசுவதும் கிடையாது.
இத்தகவலை கேள்வியுற்ற ஒரு தனியார் தொண்டு நிறுவனத்தினர், போலீசார் உதவியுடன் இரு சகோதரிகளையும் மீட்டு, மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.அதில் கோமாநிலையில் இருந்த அனுராதா சிகிச்சை பலனளிக்காமல் இறந்து போனார். மற்றொருவரான சோனாலி உடலின் பல்வேறு பாகங்கள் செயலிழந்த நிலையில் உயிருக்கு போராடி வருகிறார்.
இவர்களின் சகோதரர் விபின் பஹல்.இவர் திருமணமாகி தனியே வசித்து வருகிறார். கடந்த 4 வருடங்களாக சகோதரிகளுடன் தொடர்பு இல்லாமல் இருந்து வருகிறார்.தன்னுடைய சகோதரிகளை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தான் கடைசியாக பார்த்ததாகவும், சொத்து பிரச்னையில் தன் மீது சகோதரிகளுக்கு வருத்தம் இருப்பதால் அவர்களுடன் சுமுக உறவு கிடையாது என்றும் அவர் தெரிவித்தார்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza