Saturday, April 9, 2011

புதுவலசை - அறிவியலின் உச்சகட்டத்தில் மனித நேயத்தின் நிலை ஜும்ஆ பயான்

புதுவலசையில் 8.4.2011 வெள்ளிகிழமை அன்று அல் மஸ்ஜிதுல் ஜாமிஆ பள்ளியில் ஜும்ஆ பயான் நடைபெற்றது.இதில் சகோதரர் அஹமது அமீன் ஆலிம் அவர்கள் அறிவியலின் உச்சகட்டத்தில் மனித நேயத்தின் நிலை என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.
.
அறிவியலின் உச்சகட்டத்தில் மனித நேயம் அழிந்து வருகின்றது என்பதை வலியுறுத்தி அதற்கு பல ஹதீதுகளையும் சான்றாக கூறியது கேட்பவர்களை கவனம் சிதறாமல் தன் பக்கம் ஈர்ப்பதாய் இருந்தது .தனது உறையில் இன்றைய உலகில் வாழும் நம் கையில் அறிவியல் சாதனங்கள் தவழ்ந்து கொண்டிருக்கிறது. அதில் நம்முடைய உதவிக்காக மனிதனை போன்று மனிதனால் உருவாக்கப்பட்ட மனிதன் செய்யக்கூடிய அனைத்து வேலைகளையும் கச்சிதமாக செய்து முடிக்கும் ஒரு எந்திரமனிதன் தான் ரோபோ. அதன் வளர்ச்சி பற்றி குறிப்பிட்டார்.


நவீன காலத்தில் மிக விரைவாக முன்னேறி கொண்டிருக்கும் துறை தான் மருத்துவம். அறுவை சிகிச்சை,மரபணு சோதனை,டெஸ்ட் டுயுப் பேபி என பல சாதனைகளில் வெற்றியை தழுவிக் கொண்டிருக்கின்றது.தமிழ்நாட்டில் இருந்து கொண்டே வெளிநாட்டவரிடம் உதவி பெற்றும் சிகிசை செய்கின்றனர்.

இதே சூழ்நிலையில் வளர்ந்து வரும் அறிவியலில் கணிணி துறையில் தகவல் தொழில்நுட்பம் முக்கிய பங்கு வகிக்கின்றது.முன்னொரு காலத்தில் வெளிநாட்டில் வேலைக்கு சென்ற தன் கணவனிடமோ அல்லது தனது மகனிடமோ தொடர்பு கொள்ள மாத கணக்கில் காத்திருக்க வேண்டும்.ஆனால் இன்றோ நொடிப்பொழுதில் தொடர்பு கொள்ளும் வசதி வந்து விட்டது. என்று நிதர்சனமான நம் மனதில் எழுதில் பதியும் விஷயங்களை குறிப்பிட்டார்.

இவ்வாறு அனைத்து துறைகளிலும் விஞ்ஞானம் உயர்ந்து மனிதர்களாகிய நம்மையும் உயர்த்தி கொண்டு சென்றாலும் நம்மிடையே மனித நேயத்தை காணமுடியவில்லை. காரணம் நம்மிடம் ஒற்றுமை இல்லை. தற்போது தேர்தல் நேரம் என்பதால் மனித நேயத்தை பூதக் கண்ணாடி கொண்டு தேட வேண்டிய சூழ்நிலை தான் காணப்படுகின்றது என்றார்.

மனித நேயம் எங்கே செல்கிறது?

இஸ்லாம் மனிதனை அன்பு,பாசம்,பரிவு போன்ற நல்லொழுக்கப் பண்புகளை கடைபிடிக்ககூறி வலியுறுத்துகிறது. மனித நேயத்தைப் பற்றிய ரஸூல் (ஸல்) அவர்களின் வாழ்க்கையில் நாம் பல இடங்களிலும் காண முடியும்.ஒரு முறை நபி(ஸல்)அவர்கள் தோழர்களுடன் இருக்கும் போது அவ்வழியாக ஒரு ப்ரேதத்தை தூக்கிச் செல்லுகையில் நபி(ஸல்)அவர்கள் எழுந்து நின்று மறியாதை செய்யவே நபி(ஸல்)அவர்களுடைய தோழர்கள் ஆச்சரியப்பட்டனர். ஏனென்றால் அப்ப்ரேதம் ஒரு யூதனுடையது.தோழர்கள் ஏன் என்று கேட்க நபி(ஸல்) அவர்கள் யூதனாக இருந்தாலும் அவன் ஒரு மனிதன் என்று கூறி அவர்களுடைய மனித நேயத்தை வெளிப்படுத்தினார்கள்.

 அல்லாஹ் மனிதநேயத்தை பற்றி குறிப்பிடுகையில் நபி(ஸல்)அவர்கள்,தன் மனைவியான அன்னை ஆயிஷா(ரலி) அவர்களை அவதூறு கூறிய மனிதர்க்கு தான் தர்மம் செய்யப் போவதில்லை என்று சத்தியம் செய்து கூறினார்கள். அதை கண்டித்து இறங்கிய வசனத்தை கொண்டு நபி(ஸல்)அவர்கள் தன் தவறை திருத்திக் கொண்டார்கள்.திருகுர் ஆன் வசனம்(24:22).

நபி(ஸல்)அவர்கள் சபையில் ஒரு விருந்தினருக்கு உணவளிக்கக்கோரி கேட்க அன்ஸாரி தோழர் ஒருவர் எழுந்து நின்று தான் உபசரிப்பதாக கூறி வீட்டிற்கு அழைத்துச் சென்று அவரும் அவருடைய மனைவியும் பட்டினியாய் இருந்து விருந்தாளியை உபசரித்தனர். அப்படி பட்ட சமூகத்தை முன்மாதிரியாக கொண்ட நாம் நம் நிலைகளை மாற்றி அல்லாஹ்விற்கு கட்டுபட்டு நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை முறையை கடைபிடித்து உண்மை முஃமினாக வாழ மனிதநேயம் நமக்கு மிகவும் அவசியம் என்று கூறினார்கள். நம் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் அந்த ஒரு பண்பை தந்து அருள்புரிய வேண்டும் என்ற துஆவோடு தந்து உரையை முடித்து கொண்டார்கள்.

செய்தி - சகோதரி அனிஷா ஃபைசல்

1 கருத்துரைகள்:

Anonymous said...

Navena kandupidikalmanithanuku mikavu thaevai adhe samayatil athai seyal paduthum muraithan thavaraha ullathu valaipookal mukaputhkam pondra inayangalil naerathai veenadipathum matrum thavaraana seyalkalil ittu selkirathu,anithu vithamana kandu pidipukalayum naam immarka vaelaiki matumdan seyal padutha vaendum.hasanul banna naerathai pathi kuripidum podu nammudaya valkiye naeramdan endu kuripitarkal - bestindian

Post a Comment

Dua For Gaza