Wednesday, April 6, 2011

“எல்லோருக்கும் சம உரிமை, சம நீதி” – கே.எம்.ஷெரிப்

2_eif_1
துபாய்:”எல்லோருக்கும் சம உரிமை, சம நீதி” கிடைக்க பாடுபட வேண்டும் என பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியாவின் பொதுச் செயலாளர் கே.எம்.ஷெரிப் அவர்கள் ‘எமிரேட்ஸ் இந்தியா ஃபெரடர்னிட்டி ஃபாரோம் (EIFF)’ சார்பாக நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் உரையாற்றினார்.
கடந்த  மாதம்  அமீரகத்திற்கு வருகைதந்த பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியாவின் பொதுச்செயலாளர் கே.எம்.ஷெரிப் அவர்களுக்கு ‘எமிரேட்ஸ் இந்தியா ஃபெரடர்னிட்டி ஃபாரோம்’ (EIFF) சார்பாக துபாய் கம்ஃபோர்ட் ஹோட்டலில் வரவேற்பு நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டது.
இவ்வரவேற்பு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக  கலந்துக் கொண்ட  ஷெரிப் அவர்கள் “எல்லோருக்கும் சம உரிமை, சம நீதி” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.

EIFF தலைவர் நசிர் ஹுசைன் அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்ச்சியில், வளர்ந்து வரும் தொழில் முனைவாளரும், EIFF ஆதரவாளருமான ஜனாப் அஸ்ரப் உமர் கான் நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினரான கே.எம்.ஷெரிப் அவர்களை  வரவேற்று EIFF  பல்வேறு துறைகளில் ஆற்றிவரும் சமூக  சேவைகளை பட்டியலிட்டு நிகழ்ச்சியை துவங்கி வைத்தார்.

அவரைத் தொடர்ந்து உரையாற்றிய ஷெரிப் அவர்கள், பாப்புலர் ஃபிரண்ட்டின் நோக்கம் மற்றும் அதன் கொள்கைகள் பற்றிய விளக்கவுரை அளித்தார். அவ்வுரையில் அவர் குறிப்பிட்டதாவது; ‘இந்தியாவில் உள்ள முஸ்லிம்களில், சுமார்  7.5 சதவிகிதம் முஸ்லிம்கள் பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட வகுப்பினரை விட மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளனர். நடுத்தர முஸ்லிம்களின் வாழ்கைத்தரம், எப்படி ஏழ்மை நிலையிலிருந்து மிகவும்  மோசமான நிலைக்கு தள்ளப்படுகிறது என்பதனையும் அவர் விவரித்தார்.
மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் வாழும் முஸ்லிம்களின் வாழ்கைத் தரம், அவர்கள் வாழும் நிலைகள் ஆகியவற்றைப் பற்றியும் அவர் உரைநிகழ்த்தினார்.
30 ஆண்டுகளாக கம்யூனிஸ்ட்கள் ஆட்சி செய்யும் மேற்கு வங்கத்தில், முஸ்லிம் சமூகத்தின் அவல நிலைகளை அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும்,மதத் துவேச சக்திகளை ஒடுக்கவும்,இந்தியாவின் மதச்சார்பற்ற தன்மையை பலப்படுத்தவும் மற்றும் இந்தியாவின் ஜனநாயகத்தை பாதுகாக்கவும் நாம் அனைவரும் ஓன்று பட வேண்டும் என்றும் அவர் திறம்பட தெரிவித்தார்.
இந்தியாவில் உள்ள அனைத்து முஸ்லிம்களையும் சக்திபடுத்த பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியாவை ஆதரிக்குமாறு நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டவர்களிடம் அவர் கேட்டுக்கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் திரளான மக்கள் கலந்துக் கொண்டனர். பின்னர் EIFF-ன் மஜீத் அவர்கள் நன்றிவுரை வழங்க,மாலை தேநீர் மற்றும் சிற்றுண்டி விருந்திற்குப் பிறகு நிகழ்ச்சி நிறைவடைந்தது.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza