Friday, April 15, 2011

துனீசியா:பின் அலி மீது 18 வழக்குகள்

article-0-0D3DD979000005DC-852_239x411
துனீஸ்:முன்னாள் சர்வாதிகாரி ஸைனுல் ஆபிதீன் பின் அலி மீது 18 வழக்குகளை சுமத்துவதற்கான முயற்சிகள் பூர்த்தியானதாக சட்ட அமைச்சர் லஸ்ஹர் கரவ்பி ஷெப்பி தெரிவித்துள்ளார்.

மனப்பூர்வமாக நிகழ்த்திய இனப் படுகொலை,போதைப் பொருள் கடத்தல், நாட்டிற்கெதிரான சதித்திட்டம் உள்ளிட்ட வழக்குகள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளன. இதனை லஸ்ஹர் கரவ்பி டாப் செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.
பின் அலியின் குடும்பம், ஆதரவாளர்கள் மீது 44 வழக்குகள் சுமத்தப்படும். பின் அலியின் 23 வருட கால ஆட்சிக்கு முடிவுக்கட்டிய மக்கள் எழுச்சியைத் தொடர்ந்து அவர் சவூதி அரேபியாவுக்கு சென்றுவிட்டார். அவருடைய குடும்பத்தினர் மற்றும் ஆதரவாளர்கள் பலரும் கைது செய்யப்பட்டுள்ளனர். சவூதியிடம் பின் அலியை ஒப்படைப்பதுக் குறித்து சட்டரீதியிலான நடவடிக்கைகள் துவங்கிவிட்டதாக லஸ்ஹர் கரவ்பி தெரிவித்துள்ளார்.

ஸோஸியில் வைத்து பின் அலியின் சகோதரர் ஸலாஹ் பின் அலி கடந்த ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டார்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza