கிட்டத்தட்ட அத்தனை கட்சிகளிலுமே கிரிமினல் வேட்பாளர்கள் உள்ளனர். அதிகபட்சமாக அதிமுக சார்பில் 43 பேர் களம் இறக்கப்பட்டுள்ளனர்.
திமுகவில் 24 பேரும், பாஜகவில் 19 பேரும், பாமகவில் 14 பேரும் நிறுத்தப்பட்டுள்ளனர். திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் மற்றும் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள தேமுதிக சார்பில் தலா 6 கிரிமினல் வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
இவர்களில் அதிக அளவிலான குற்றச்சாட்டுகளுடன் கூடியவராக திகழ்பவர் திமுக வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான என்.கே.கே.பி. ராஜாதான். இவர் மீது ஆள் கடத்தல், நில அபகரிப்பு, திருட்டு என 6 வழக்குகள் உள்ளன. ஆபாசமாக நடந்து கொள்ளுதல், ஆயுதங்களை வைத்து தாக்குதல், மிரட்டுதல் என இவர் மீது வழக்குகள் உள்ளன. இவர் அந்தியூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.
3 பாஜக, அதிமுக, பாமகவைச் சேர்ந்த தலா 2 வேட்பாளர்கள், தேமுதிக, பகுஜன் சமாஜ் கட்சிகளைச் சேர்ந்த தலா ஒருவர் மீதும் கடுமையான குற்றச்சாட்டுகளுடன் கூடிய வழக்குகள் நிலுவையில் உள்ளன.
நாகப்பட்டனம் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் முருகானந்தம் மீது ஐந்துக்கும் மேற்பட்ட கொலை முயற்சி வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல பகுஜன் சமாஜ் கட்சியின் பூம்புகார் தொகுதி வேட்பாளர் மீதும், ஆண்டிப்பட்டி அதிமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் மீதும் கொலை முயற்சி வழக்குகள் உள்ளன.
|
0 கருத்துரைகள்:
Post a Comment