Monday, March 14, 2011

DPF நிகழ்ச்சியை சீர்குலைக்க முயற்சி - சங்க்பரிவார் குண்டர்கள் கைது

ஜம்மு கஷ்மீர் மாநிலம் கத்வா மாவட்டத்தில் டெமோக்ரேடிக் பீப்பிள்ஸ் ஃபாரம்(DPF) தலைவர் ஷபீர் ஷா ஏற்பாடுச் செய்த நிகழ்ச்சியை சீர்குலைக்க முயன்ற பா.ஜ.க, சிவசேனா, பஜ்ரங்தள் குண்டர்கள் 25 பேரை போலீசார் கைது செய்தனர்.

DPF-இன் தலைவரான ஷபீர் ஷா க்ராண்ட் ப்ளாசா ஹோட்டலில் வைத்து கூட்டம் ஒன்றை நடத்தினார். ஷபீர் ஷா ஹோட்டலுக்கு வந்தவுடன் ஏற்கனவே அங்கு திரண்டிருந்த சங்க்பரிவார் குண்டர்கள் அவருக்கெதிராக கோஷமிட்டு நிகழ்ச்சியை தடுக்க முயன்றனர். ஆனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அவர்களை
தடுத்தனர்.

கஷ்மீர் பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கான பேச்சுவார்த்தைக்கு உகந்த சூழலை அரசு உருவாக்க வேண்டுமென ஷபீர் ஷா அக்கூட்டத்தில் உரை நிகழ்த்தினார்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza