Friday, March 4, 2011

கோத்ரா வழக்கை மறுவிசாரணைச் செய்யவேண்டும் - பிரசாந்த் பூஷண்

புதுடெல்லி,மார்ச்.3:கோத்ரா ரெயில் எரிப்பைக் குறித்து மறுவிசாரணை நடத்தவேண்டுமென பிரபல உச்சநீதிமன்ற வழக்கறிஞரும், மனித உரிமை ஆர்வலருமான பிரசாந்த் பூஷண் வலியுறுத்தியுள்ளார்.

2002-ஆம் ஆண்டு குஜராத் கலவரத்திற்கு காரணமான கோத்ரா ரெயில் எரிப்பு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் 31 பேருக்கு தண்டனை வழங்கப்பட்டு 62 பேர் விடுதலைச் செய்யப்பட்ட சூழலில் பிரசாந்த் பூஷண் இக்கோரிக்கையை விடுத்துள்ளார்.

தவறான ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு தவறான தீர்ப்பை கோத்ரா சிறப்பு நீதிமன்றம் அளித்துள்ளது என பிரசாந்த் பூஷண் கூறுகிறார்.

'தண்டனை விதிக்கப்பட்டவர்கள் மேல்முறையீடுச் செய்ய முடியுமென்றாலும், கோத்ரா ரெயில் எரிப்பு சம்பவத்தைக் குறித்து ஒரு மறுவிசாரணை நடத்தவேண்டும். தவறான சூழலில் எழுந்த வழக்கு இது. மரணத்தண்டனை விதிக்கப்பட்டவர்கள் மீது தீவைப்பு குற்றம் சுமத்தியதில் ஒரு நியாயமுமில்லை. அது போதாது என அவர்கள் மீது கொலைக் குற்றமும், சதித்திட்டம் தீட்டிய குற்றமும் சுமத்தப்பட்டுள்ளது.' என பிரசாந்த் பூஷண் தெரிவித்துள்ளார்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza