ஒரிசா மாநிலத்தில் ஒரு தனியார் நிறுவனத்தில், தொழிலாளர் பிரச்சனை காரணமாக, காரில் வந்த அதிகாரியை மடக்கி, காருடன் தீ வைத்து கொளுத்திய கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ஒரிசா மாநிலம் பாலாங்கிர் மாவட்டம் டிட்லாகர் என்ற இடத்தில் தனியார் இரும்பு தொழிற்சாலை உள்ளது. இங்கு ஏராளமான தொழிலாளர்கள் பணிபுரிகிறார்கள். சில மாதங்களுக்கு முன் 14 நிரந்தர தொழிலாளர்கள், 45 ஒப்பந்த தொழிலாளர்கள் பல்வேறு காரணங்களுக்காக சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.
சஸ்பெண்டு செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்க கோரியும், சம்பள உயர்வு உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் தொழிலாளர்கள் ஒன்று திரண்டு தொழிற்சாலை முன்போராட்டம் நடத்தினார்கள்.
அப்போது தொழிற்சாலையின் துணைப் பொதுமேலாளர் ராதேஷியாம்ராய், மதிய உணவிற்குச் செல்வதற்காக ஒரு ஊழியருடன் காரில் வெளியே வந்தார். உடனே தொழிலாளர்கள் அவரது காரை சூழ்ந்து கொண்டு முற்றுகையிட்டனர். திடீர் என்று ஆவேசம் அடைந்த தொழிலாளர்கள் காரில் இருந்த ஊழியரையும், ஓட்டுனரையும் வெளியேற்றினார்கள்.
அதிகாரியை மட்டும் காருக்குள் அடைத்து பெட்ரோல் ஊற்றி தீ வைத்தனர். இதில் கார் தீப்பற்றி எரிந்தது. அருகில் வசிக்கும் பொதுமக்கள் சிலர் ஓடி வந்து அதிகாரியை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். 90 சதவிகித தீக்காயங்களுடன் இருந்ததால் வழியிலேயே அவர் இறந்தார். இதைத் தொடர்ந்து தொழிலாளர்கள் தப்பி ஓடி விட்டனர்.
காவலர்கள் விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். அதிகாரி எரித்து கொல்லப்பட்டது தொடர்பாக தொழிற்சங்க தலைவர் உள்பட 30 தொழிலாளர்கள் மீது காவல் துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

0 கருத்துரைகள்:
Post a Comment