Friday, March 4, 2011

துனீசியா: 'அல் நஹ்தா' இஸ்லாமிய இயக்கத்தின் மீதான தடை நீக்கம்

துனீஸ்,மார்ச்.4:துனீசியாவில் நாட்டை விட்டு வெளியேறிய சர்வாதிகாரி ஜைனுல் ஆபிதீன் பின் அலியால் தடைச்செய்யப்பட்ட இஸ்லாமிய இயக்கமான அல்நஹ்தாவின் தடையை துனீசிய அரசு நீக்கியுள்ளது. அல் நஹ்தா செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

துனீசியாவில் மக்கள் எழுச்சியால் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தை தொடர்ந்து 20 வருடமாக வெளிநாட்டில் வாழ்ந்திருந்த அல் நஹ்தாவின் தலைவர் ராஷித் அல் கன்னோஷி நாடு திரும்பியிருந்தார்.

துனீசியாவில் மக்கள் எழுச்சிப் போராட்டத்தின் போது எழுப்பப்பட்ட பிரதான கோரிக்கைகளில் ஒன்று அல்நஹ்தாவின் தடையை நீக்குவதாகும்.

1989-ஆம் ஆண்டு தேர்தலில் பெரும் மோசடிகள் நடந்த பிறகும் அல் நஹ்தா இரண்டாவது பெரிய கட்சியாக வெற்றிப் பெற்றது. ஆனால், இதனை அங்கீகரிக்காமல் ஜைனுல் ஆபிதீன் பின் அலியின் சர்வாதிகார அரசு அல்நஹ்தாவுக்கு தடை விதித்தது. அதன் ஊழியர்கள் சிறையிலடைக்கப்பட்டனர்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza