Sunday, March 20, 2011

லிபியாவின் மீது பிரான்சின் தாக்குதல் துவங்கியது

  a10_get_in_line
திரிபோலி:ஜனநாயக ரீதியிலான மக்கள் எதிர்ப்பு போராட்டத்தை லிபியாவின் ஏகாதிபத்தியவாதி முஅம்மர் கத்தாaஃபி கொடூரமாக அடக்கி ஒடுக்கி வருவதை சுட்டிக்காட்டி பிரான்சு அந்நாட்டு ராணுவத்தின் மீதான விமானத் தாக்குதலை தொடுத்துள்ளது.
லிபிய ராணுவத்தின் ஐந்து டாங்குகளை பிரஞ்சு விமானங்கள் தகர்த்தன. நேற்று இரவிலேயே விமானப்படை தாக்குதலுக்கு தயாராகிவிட்டது.
லிபியாவின் மீதான ராணுவ நடவடிக்கைக்கு கடந்த புதன்கிழமை ஐ.நா அனுமதியளித்தது. மேலும் பல நாடுகள் தாமதிக்காமல் பிரான்சுடன் இணைந்து தாக்குதலில் பங்கேற்கும் என கருதப்படுகிறது.
லிபியாவுக்கெதிரான நடவடிக்கைகளைக் குறித்து விவாதிப்பதற்கு ஐரோப்பிய யூனியன், அரபு லீக், ஆப்பிரிக்க யூனியன், ஜெர்மனி, பிரிட்டன், அமெரிக்கா ஆகியவற்றின் பிரதிநிதிகளின் அவசரக் கூட்டம் ஐ.நா பொதுச்செயலாளர் பான் கீ மூனின் முன்னிலையில் பாரிஸில் நடந்தது.
இதன் பின்னர் இத்தாக்குதல் நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சிவிலியன்களுக்கெதிரான தாக்குதலை நிறுத்தாவிட்டால் ராணுவ நடவடிக்கை மேற்கொள்வோம் என அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா நேற்று முன்தினம் தெரிவித்திருந்தார்.
லிபியாவின் வான் பகுதியில் விமானம் பறப்பதற்கு தடைச் செய்யப்பட்டுள்ளதாக ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் அறிவித்த உடனேயே ஒபாமாவின் அறிக்கை வெளியானது.
அமெரிக்க கப்பற்படையின் மேலும் பல போர்க்கப்பல்கள் மத்திய தரைக்கடல் பிராந்தியத்திற்கு சென்றுள்ளன.
பிரான்சின் தாக்குதலை ரஷ்யா கண்டித்துள்ளது. லிபியாவில் தாக்குதல் நடத்துவதற்கான சூழல் தற்போது இல்லை என ரஷ்யா கருத்து தெரிவித்துள்ளது.
போர்நிறுத்த பிரகடனத்தை காற்றில் பறத்திய கத்தாஃபியின் ராணுவம் எதிர்ப்பாளர்களின் கட்டுப்பாட்டிலுள்ள பெங்காசியின் மீது தாக்குதல் நடத்தியது. அப்பகுதியை சுற்றிவளைத்த லிபிய ராணுவம் கடற்பகுதியிலிருந்தும் தெற்கு பிரதேசத்திலிருந்தும் தாக்குதலை தொடுத்தது.
லிபியாவின் போர் விமானங்கள் பெங்காசியில் குண்டுமழைப் பொழிந்ததாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. பெங்காசியின் சுற்றுப்பகுதியான கோரஷியாவிலும் சமீபத்திய பகுதிகளிலும் தாக்குதல் நடந்துள்ளது.
பெங்காசியின் அனைத்து மாவட்டங்களிலும் ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக எதிர்ப்பாளர்களின் தலைவர் முஸ்தஃபா அப்துல் ஜலீல் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே லிபியா ராணுவத்தின் போர் விமானத்தை எதிர்ப்பாளர்கள் சுட்டு வீழ்த்தினர்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza