Sunday, March 20, 2011

கைவெட்டு வழக்கு – என்.ஐ.ஏ விசாரணை தொடங்கியது!

joseph

கேரள மாநிலம் தொடுபுழாவில் உள்ள நியுமேன் கல்லூரியின் ஆசிரியர் ஜோசப் என்பவரின் கை மர்ம நபர்களால் கடந்த வருடம் ஜூலை மாதம் வெட்டப்பட்டது. இதனை தொடர்ந்து கேரளா உயர் நீதி மன்றத்தில் இந்த வழக்கு நடந்து வருகிறது. தற்போது நேஷனல் இன்வெஸ்டிகேஷன் ஏஜன்ஸி (N.I.A) இந்த வழக்கை கையில் எடுத்துள்ளது.

மத்திய அரசின் உத்தரவின்படி என்.ஐ. ஏ கடந்த வாரத்தில் தான் இவ்வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டதாக தெரிகிறது. என்.ஐ.ஏவின் ஒரு குழு ஹைதரபாதிலிருந்து கேரளா சென்று அங்கே நேரடியாக இவ்வழக்கில் பாதிக்கப்பட்ட பேராசிரியர் ஜோசப்பை சந்தித்து விசாரணை நடத்தியது. முதற்கட்ட விசாரணையின் அறிக்கையை என்.ஐ.ஏ மத்திய் உள்துறை அமைச்சகத்திடம் ஒப்படைக்கும் என்று தெரிகிறது. அதனை தொடர்ந்து வழக்கிற்கான முழு விசாரணையை மேற்கொள்ளும்.

தொடுபுழாவில் உள்ள நியு மேன் கல்லூரியில் மலையாள பேராசிரியராக இருந்தவர் டி.ஜே. ஜோசப். இவர் கடந்த‌ வருடம்  முஸ்லிம்கள் தங்கள் உயிரை விட புனிதமாக மதிக்கும் முஹம்மது நபி(ஸல்) அவர்களை இழிவு படுத்தும் வகையில் ஒரு கேள்வித்தாளை வெளியிட்டிருந்தார். இதனால் ஆத்திரமடைந்த சில மர்ம நபர்கள் கடந்த ஜூலை மாதம் ஜோசப் தன் குடும்பத்தாருடன் ஞாயிற்றுக்கிழமை சர்ச் சென்றுவிட்டு திரும்பும் நேரத்தில் இவரது கையை வெட்டினர். இதனை தொடர்ந்து ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மீது சுமத்தி பல உறுப்பினர்களை கைது செய்தது கேரள அரசாங்கம். ஆனால் பாப்புலர் ஃப்ரண்ட் இத்தகைய செயலை வன்மையாக கண்டிப்பதோடு இத்தகைய செயலுக்கும் பாப்புலர் ஃப்ரண்டிற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று ஆரம்ப முதலே கூறிவருகிறது. முஸ்லிம் சமூகத்தின் உணர்வுளை புண்படுத்தியதாக கூறி கல்லூரி நிர்வாகம் ஜோசப்பை பணி நீக்கம் செய்தது குறிப்பிடத்தக்கது.
குற்றவாளிகளை தப்பிக்க உதவி செய்ததாக கூறி சிலருடைய வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அதை திருப்பி தரமுடியாது என எர்ணாக்குளம் சிறப்பு நீதி மன்றம் கடந்த மார்ச் 11 ஆம் தேதி அன்று கூறியது.

கேரளா உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கை என்.ஐ.ஏவிடம் ஒப்படைக்கக்கோரி விவாதம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து கேரளா காவல்துறை இந்த வழக்கின் குற்றப்பத்திரிக்கையை என்.ஐ.ஏவிடம் ஒப்படைத்தது. 54 நபர்கள் இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளார்கள். அதிலே 29 நபர்கள் இன்னும் தலைமறைவாக உள்ளனர் என்று அந்த அறிக்கை கூறுகிறது.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza