Sunday, February 20, 2011

SDPI-ன் சென்னை மண்டல மாநாடு தொடக்கம்

அரசியலை நமதாக்குவோம் தேசத்தை பொதுவாக்குவோம் என்ற முழக்கத்துடன் 20-02-2011 ஞாயிரன்று காலை 9 மணியளவில் சென்னை ராயபேட்டை அரசு மருத்துவமனை எதிரில் காயிதே மில்லத் திடலில் (ஒய்எம்சிஏ மைதானம்) கொடியேற்றத்துடன் சென்னை மண்டல மாநாடு துவங்கவிருக்கிறது.

மாநில தலைவர் கேகேஎஸ்எம் தெஹ்லான் பாகவி கொடியேற்றி வைக்கிறார். காலை 10:30 மணியளவில் புதிய சட்ட மன்றம் அருகிலுள்ள அண்ணா ஆடிடோரியத்தில் அப்பாவிகளை விடுதலை செய் குண்டுவெடிப்பு குற்றவாளிகளை சிறையிலிடு என்ற எஸ்டிபிஐ யின் தேசிய அளவிலான பிரசார துவக்க விழா கருத்தரங்கம் நடைபெறுகிறது.

இக்கருத்தரங்கில் எஸ்டிபிஐ அகில இந்திய தலைவர் இ அபுபக்கர் அவர்கள் தலைமை தாங்குகிறார். முஹம்மது உமர் கான் வரவேற்புரை நிகழ்த்த பாப்புலர் ஃப்ரண்ட் துணைத்தலைவர் முஹம்மது அலி ஜின்னா , அட்வகேட் ஷாஜித் ஹுஸைன் சித்தீகி , ப.பா. மோகன் , பேராசிரியர் அ.மார்க்ஸ், அம்ஜத் பாஷா மற்றும் எஸ்டிபிஐ மாநில தலைவர் தெஹ்லான் பாகவி உட்பட பல தேசிய மற்றும் மாநில தலைவர்கள் சிறப்புரையாற்றுகின்றனர்.

பிற்பகல் 2:45 மணியளவில் சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் எஸ்டிபிஐ அகில இந்திய தலைவர் இ அபுபக்கர் அவர்கள் எழுச்சிப் பேரணியை கொடியசைத்து துவக்கி வைக்கிறார். பின்னர் மாலை 5 மணிக்கு காயிதே மில்லத் திடலில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. அப்பொதுக்கூட்டத்தில் தேசிய தலைவர் இ அபுபக்கர் மாநில தலைவர் தெஹ்லான் பாகவி, பாப்புலர் ஃப்ரண்ட் மாநில தலைவர் ஏஎஸ் இஸ்மாயில் , அகில இந்திய மீனவ சங்கதலைவர் அண்டன் கோமஸ் , தேசிய சிறுபான்மை மக்கள் இயக்க தமிழ் மாநில தலைவர் அருள்தாஸ், எஸ்டிபிஐ கேரள மாநில பொதுச்செயலாளர் எம் கே மனோஜ் குமார், நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் மாநில துணை தலைவர் சகோதரி ஏ. ஃபாத்திமா ஆலிமா எஸ்டிபிஐ கர்நாடகா மாநில துணைத்தலைவர் பேராசிரியர் நாஸ்னீன் பேகம் மற்றும் எஸ்டிபிஐ மாநில பொதுச்செயலாளர் ஆகியோர் சிறப்புரையாற்றுகின்றனர்.

SDPI வலைதளத்தில் அனைத்து நிகழ்ச்சிகளும் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza