சோஸியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியாவின் அழகங்குளம் கிளை சார்பாக கொடியேற்று நிகழ்ச்சி 16/02/2011 மாலை 5.00 மணியளவில் அழகங்குளம் பேருந்து நிலையம் அருகில் SDPI -யின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பரமக்குடி கனி தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு SDPI அழகங்குளம் தலைவர் A.சாஹிர்தீன், துணை தலைவர் S.முஹம்மது ரிபாய்,செயலாளர் M.மனாஸ் ரஹ்மான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பனைக்குளம் கிளை தலைவர் ரியாஸ் அஹமது M.C.A., அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். SDPI -யின் மாவட்ட துணை தலைவர் கருணாகரன் B.SC, B.L கொடியேற்றி சிறப்பித்தார். அதனை தொடர்ந்து SDPI -யின் ராம்நாட் தொகுதி செயளாலர் அப்துல் ஜமீல் அவர்கள் SDPIயின் செயல்பாடுகள் மற்றும் பிப்ரவரி 20ல் SDPI நடத்தவிருக்கும் சென்னை மண்டல மாநாடு குறித்து சிறப்புரை நிகழ்த்தினார். மெலும் இந்த கூட்டத்திற்கு சித்தார்கோட்டை தலைவர் உமர் அலி, புதுவலசை தலைவர் அபுரார் அஹமது, தேவிபட்டினம் நகர் தலைவர் முகைதீன், நகர் மன்ற உறுப்பினர்கள்,SDPI செயல்வீரர்கள் மற்றும் ஜமாஅத்தார்கள், சங்கத்தார்கள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். இறுதியாக நகர் செயலாளர் நன்றியுரையோடு நிகழ்ச்சி இனிதே நிறைவுப்பெற்றது.
2 கருத்துரைகள்:
Mashaallah Brother Faizal
அஸ்ஸலாமு அலைக்கும்.
வரவேற்கிறேன்,இது போன்ற அமைப்புகள் மூலம் சிருபான்மையானாரான நம் மக்களுக்கு அரசிடமிருந்து கிடைக்கக் கூடிய சலுகைகளை எவ்வித தொய்வின்றி கிடைப்பதற்கும் சமூக சிந்தனையுடன் செயல் படுவீர்கள் எனவும் எண்ணி நானும் இந்த இயக்கத்தில் ஒரு அங்கத்தினராக இணைத்துக் கொள்கிறேன்.
நாட்டின் பல சமூக ஜன நாயக மற்றும் அரசியல் தன்மையை பாது காப்பதற்கான இக்குழுவின் முயற்ச்சியினை வரவேற்று.... பிறர் அச்சுறுத்தல்களின் கட்டளைக்கு அடி பணியாமல்,நாட்டின் தேசப் பற்றுவிற்கு குந்தகம் விளைவிக்காமல் இருப்பிர்கள் என எண்ணி இணைகிறேன்.
Post a Comment