Thursday, February 3, 2011

விலைவாசி உயர்வால் இலங்கையில் மக்கள் புரட்ச்சி வெடிக்கும்: ரணில்!!

கொழும்பு, பிப்.1- விலைவாசியைக் கட்டுப்படுத்த அவசர நடவடிக்கை எடுக்கத் தவறினால் எகிப்து, துனீசியாவில் ஏற்பட்டது போன்று அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம் வெடிக்கும் என்று இலங்கை எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கே கூறியுள்ளார். கம்பகா நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு பேசுகையில் அவர் இவ்வாறு தெரிவித்ததார். "இலங்கையில் அரிசி மற்றும் உணவுப் பொருட்களின் விலை இதுவரை இல்லாத அளவு உச்சத்தை தொட்டுள்ளது. மக்கள் பணத்தை அரசு தவறாக கையாள்கிறது. எகிப்து, துனீசியாவில் ஏற்பட்ட நிலை இலங்கை அரசுக்கு ஒரு எச்சரிக்கையாக இருக்க வேண்டும். விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த தவறினால் எகிப்து, துனீசியா நிலை இங்கும் ஏற்பட அதிக காலம் ஆகாது." என்று ரணில் பேசியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza