Thursday, February 17, 2011

'நான் இன்னும் எதிபார்கிறேன்' - ஈரானில் போராட்டக்காரர்களை உசுப்பிவிடும் ஒபாமா

வாஷிங்டன்,பிப்.17:ஈரானில் அரசுக்கெதிரான போராட்டாங்கள் இன்னும் அதிகரிக்கும் என்று தான் நம்புவதாக அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா தெரிவித்துள்ளார்.

ஈரான் நாட்டு மக்கள் தனி சுதந்திரத்துடன் வாழ முன்வர வேண்டியும், மக்கள் சார்பு அரசை ஈரானில் அமைப்பதற்கும் மக்கள் போராட்டங்களை தீவிரபடுத்துவார்கள் என்று நம்புவதாகவும், எதிபார்ப்பதாவகும் ஒபாமா கூறிகிறார்.

முன்னதாக, ஈரானில் கலவரங்களின் பின்னணியில் அமெரிக்க மற்றும் இஸ்ரேல் உள்ளதாக அதன் எம்.பிக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மத்திய கிழக்கு பகுதிகளில் மக்கள் போராட்டங்களை ஈரான் ஆதரித்ததினால் அவர்கள் இவ்வாறு நடந்துகொள்வதாக ஈரான் மக்களவை தலைவர் தெரிவித்துள்ளார்.

மேலும், மத்திய கிழக்கு பகுதுகளில் அமெரிக்கா தனது ஆளுமையை ஜனநாயகம் என்ற போர்வையில் நிலைநிறுத்த முயல்வதகாவும் அவர் குற்றம்சாட்டினார்.

2009ம் ஆண்டு தேர்தலில் தோல்வியுற்ற மீர் ஹுசைன் மற்றும் மேஹ்டி கரூபி ஆகியோர் அழைத்திருந்த போராட்டத்தில், இரண்டு பேர் கொல்லப்பட்டனர் மற்றும் ஏழுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இதனிடையே, ஈரானில் நடக்கும் போராட்டங்களுக்கு இஸ்ரேலும் தன் தார்மீக ஆதரவை தெரிவித்துள்ளது.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza