Sunday, February 20, 2011

அமெரிக்கா-தாலிபான் ரகசிய பேச்சுவார்த்தை துவங்கியது

நியூயார்க்,பிப்.20:தாலிபான் மூத்த தலைவர்களுடனான அமெரிக்காவின் நேரடி பேச்சுவார்த்தை துவங்கியதாக செய்திகள் கூறுகின்றன.

ஆப்கான் பிரச்சனைக்கு அரசியல் தீர்வுதான் சரியானது என அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஹிலாரி கிளிண்டன் நேற்று முன்தினம் தெரிவித்தது இதனடிப்படையிலாகும்.

ஒபாமா அரசு தாலிபான்களுடன் நேரடியாக பேச்சுவார்த்தையை துவக்கியுள்ளதாக 'நியூயார்க்கர்' மாத இதழ் கூறியுள்ளது. புலிஸ்டர் விருதுப்பெற்ற ஸ்டீவ் கால் தனது பக்கத்தில் இத்தகவலை வெளியிட்டார்.

ஆப்கானில் அமைதியை மீண்டும் உருவாக்குவதில் தயாராகும் தலைவர்கள் யார்? அவர்களின் நிபந்தனைகள் என்ன? என்பதை புரிந்துகொள்வதுதான் அமெரிக்காவின் நோக்கம். ஹிலாரியின் ஏசியா சொசைட்டியின் உரையும் இதனடிப்படையிலானதாகும்.

ஆப்கானில் அமெரிக்க ராணுவத்தின் எண்ணிக்கை அதிகரிப்பதன் நோக்கம் தாலிபானை பலகீனப்படுத்தவும், அல்காயிதாவிலிருந்து தாலிபானை அப்புறப்படுத்துவதற்குமாகும் என ஹிலாரி கூறுகிறார்.

அல்காயிதாவுடனான உறவை தாலிபான் முறிக்காதவரை அதன் கடுமையான பதிலடியை அவ்வமைப்பு சந்திக்க தயாராக வேண்டுமென ஹிலாரி மிரட்டல் விடுத்துள்ளார்.

தாக்குதல் பாதையை விட்டு மாறி, ஆப்கானின் அரசியல் சட்டத்தை மதித்து நடக்க தயாரானால் தாலிபானுக்கு சமூகத்தின் தேசிய நீரோட்டத்தில் இடம் கிடைக்கும் என ஹிலாரி தெரிவித்துள்ளார்.
செய்தி:பாலைவனதூது 

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza