Friday, February 25, 2011

அல்ஜீரியா எழுச்சிப் போராட்டத்தில் மோதல்

அல்ஜீரியா நாட்டின் தலைநகரான அல்ஜீர்ஸில் கல்வி அமைச்சகத்திற்கு வெளியே திரண்ட அரசுக்கெதிராக எழுச்சிப் போராட்டத்தை நடத்திவரும் மக்களும் , போலீசாரும் மோதியதில் ஏராளமானோருக்கு காயமேற்பட்டது.

பேரணி நடத்துவதற்கு தயாரான மாணவர்கள் மீது போலீஸ் தடியடியை மேற்கொண்டது. வேலையில்லாத் திண்டாட்டமும், ஊழலும், அத்தியாவசியப் பொருட்களின் விலையும் பெருமளவில் அதிகரித்த சூழலில் அதிபர் அப்துல் அஸீஸ் போட்ஃப்ளிக்கா பதவி விலகக்கோரி அந்நாட்டு மக்கள் எழுச்சிப் போராட்டத்தை நடத்திவருகின்றனர்.

மாணவர்கள் அழைப்பு விடுத்த பேரணி துவங்குவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு போலீஸ் சாலையில் தடையை ஏற்படுத்தியிருந்தது. அதேவேளையில், துனீஷியா மற்றும் எகிப்தைப்போல பெரும் மக்கள் திரள் போராட்டத்திற்கு வாய்ப்பில்லை என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

முக்கிய எதிர்கட்சி இதுவரை போராட்டத்தில் பங்குபெறவில்லை என அல்ஜீரியன் முஸ்லிம் ஸ்கவுட் எம்.பி நூறுத்தீன் பின் பிரஹாம் கூறினார்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza